ஏறாவூரில் கன்டெய்னர் சொப்களை நிறுவுவதற்கு நகர சபை நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்ளூர் ஒத்துழைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் உதவியுடன் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதான வீதி, புன்னக்குடா வீதி மற்றும் வாவிக்கரைப் பூங்கா வளாகம் ஆகிய இடங்களில் இந்த கன்டெய்னர் கடைகள் நிறுவப்படவுள்ளன.
உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திறந்த கேள்வி அடிப்படையில் வர்த்தகர்களுக்கு இக்கடைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதற்கென ஏழு கன்டெய்னர்கள் தற்போது தருவிக்கப்பட்டுள்ளதுடன் அவை கடைகளாக வடிவமைக்கப் பட்டதும்
கேள்வி அறிவித்தல் வெளியிடப் படவுள்ளதாக நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment