கல்முனை மாநகர சபையின் டெங்கு ஒழிப்பு மூன்றாம் நாள் வேலைத்திட்டம்



ஏயெஸ் மெளலானா-
கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக கல்முனை மாநகர சபையினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (07) மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் கீழ் இஸ்லாமாபாத், கல்முனை தமிழ் பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணற்சேனை பிரதேசங்களில் திண்மக்கழிவுகளும் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக அமைகின்ற கொள்கலன்களும் சேகரித்து அகற்றபட்ட்டுள்ளன.

மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு மேற்பார்வையாளர் எம்.அத்ஹம் மற்றும் வலய மேற்பார்வையாளர்களும் இவற்றை நெறிப்படுத்தியிருந்தனர்.

இக்கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் 04 வலயங்களுக்குமான அனைத்து திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் ஆளணியினரும் ஒரு வலயத்தில் முழுமையாக களமிறக்கப்பட்டு, அவ்வலயத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை வியாழக்கிழமை (08) மருதமுனை மற்றும் பெரிய நீலாவணை பிரதேசங்களில் இக்கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :