அந்த பிரதேச செயலகத்தின் கீழ்தான் உப செயலகம் ஒன்று 1989 களில் உருவாக்கப்பட்டது. அதற்கென வேறு எல்லைகள் கிடையாது.
கல்முனை பிரதேச செயலகத்தின் எல்லைதான் உப செயலகத்துக்கும் உண்டு.
கல்முனையில் முஸ்லிம் செயலகம் என்றும் தமிழ் செயலகம் என்றும் உள்ளதாக அரசின் வர்த்தமாணி உள்ளதா என்பதை சவாலாக கேட்கிறேன்.
கல்முனை உப செயலகத்தை தரமுயர்த்துவது என்றால் அதற்கென எல்லை இருக்க வேண்டும். எல்லைகள் இல்லாத ஒன்றை எப்படி தனி செயலகமாக தரமுயர்த்துவது என்ற அறிவு இல்லையா?
இவ்வாறு தரமுயர்த்த முடியாது என சொல்வதன் மூலம் கல்முனையில் தமிழ், முஸ்லிம் இன உறவுக்கு பாதிப்பு என சொல்வது இனவாதிகள் மட்டும்தான்.
கல்முனையில் இது வரை ஒரே செயலகம் இருப்பதால்தான் முஸ்லிம், தமிழ் உறவு சீராகவே இருக்கிறது. இங்கு தமிழ், முஸ்லிம் முறுகல் என்பது இனவாத தமிழ் கட்சிகளுக்கும் இன வாத முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில்தான் உள்ளது. பொது மக்கள் எந்த முறுகலும் இன்றி வாழ்கிறார்கள்.
எந்தவொரு பிரதேச செயலகத்தையும் அல்லது பிரதேச சபையையும் இனரீதியாக பிரிக்க முடியாது என்பது படித்தோருக்கு புரியும்.
இதனால்தான் கல்முனையை மூன்று பிரதேசங்களாக, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு என பிரித்து 99 வீதம் தமிழ் மக்கள் வாழும் பாண்டிருப்பையும் சேனைக்குடியிருப்பையும் இணைத்து தனியான செயலகம் வழங்கும் படி எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) மட்டுமே பல காலமாக தீர்வை முன் வைத்து வருகிறோம். இதனை தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஏற்றால் பிரச்சினை முடிந்து விடும். ஆனால் இக்கட்சிகள் இத்தீர்வு திட்டத்துக்கு உடன்படவே மாட்டார்கள். காரணம் கல்முனையில் தமிழ், முஸ்லிம் முறுகலை உருவாக்கி உசுப்பேற்றுவதன் மூலமே இக்கட்சிகள் வாக்குகளை கொள்ளையடிக்கின்றன என்பதே யதார்த்தமாகும்.
கல்முனை ஏன் இன்னமும் பாரிய அபிவிருத்தி பெறவில்லை என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு ஹரீஸ் எம்பி பதில் தரும்போது 1989ம் ஆண்டு உப செயலகம் ஆயுதமுணையில் ஆரம்பிக்கப்பட்டதாலும் கல்முனை நகர் போன்ற பகுதிகள் தமிழ் கிராம சேவக பிரிவுகளில் இருப்பதாலும் ஒன்னும் முடியவில்லை என்கிறார்.
1989 முதல் பெருந்தலைவர் அஷ்ரப் எம்பியாக இருந்தார். 1994முதல் கல்முனை பிரதேச சபையின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசிடம் மட்டுமே இருந்து வருகிறது.
1994ம் ஆண்டு முதல் அஷ்ரப் அரசியின் அச்சாணியகவும் கெபினட் அமைச்சராகவும் இருந்தார்.
2000ம் ஆண்டு முதல் ரவூப் ஹக்கீம் மு. காவின் அமைச்சராக இருந்த நிலையில் ஹரீஸ் 2001 முதல் எம் பியாக இருந்தார்.
2004 தேர்தலில் ரவூப் ஹக்கீம் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத்தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகி போன மச்சான் போனவர்தான்.
இடையில் 2006முதல் கல்முனை மாநகர சபையின் மேயராக ஹரீஸ் இருந்தார்.
2009டன் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து ஹக்கீம், பசீர் சேகுதாவுத் போன்றோர் அமைச்சர்களாகவும் ஹரீஸ், பைசல் காசீம் பிரதி அமைச்சர்களாகவும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரமும் முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்தது.
இத்தனை அதிகாரம் இருந்தும் கல்முனை தமிழ் மக்களுக்கு கல்முனையில் ஒரு எம்பிதானும் இல்லாத நிலையில் அவர்கள் பகுதி ஜி எஸ்ஸுக்கு கல்முனை நகரம் போய் விட்டது என ஒப்பாரி வைப்பதற்கு வெட்கமில்லையா?
கல்முனை நகரத்தை தனியொரு "கல்முனை நகர் ஜிஎஸ்" என மாற்ற முடியாமல் போனதற்காக தமிழ் மக்கள் மீது பழியை போடுவதற்காகவா உங்கள் கட்சிக்கு கல்முனை மக்கள் விழுந்து விழுந்து ஓட்டு போட வேண்டும்?
அத்துடன் 1989ம் ஆண்டு ஒரு கெபினட் பேப்பர் ஊடாக இரவோடிரவாக கல்முனை முஸ்லிம்களின் முழு சொத்துக்களையும் தமிழ் பகுதிக்குள் சேர்த்ததாக ஹரீஸ் எம்பி சொல்கிறார்.
அப்படியிருக்க ஒரு கெபினட் பேப்பர் ஊடாக அவைகளை மீண்டும் முஸ்லிம் கிராம சேவகர்கள் பிரிவில் கொண்டு வருவதற்கு தெரியாத அமைச்சர்களாகவா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களும் எம்பீக்களும் இருந்தனர்
முழு அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரசினர் கல்முனை முஸ்லிம்களை உசார் மடையர்கள் என நினைத்து செயல்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகர முஸ்லிம்கள் இக்கட்சிக்கு எதிராக விழிக்காத வரை இந்தக்கதை இன்னும் பல வருடங்களுக்கு ஓடும்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி.
முன்னாள் உப தலைவர்,
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கல்முனை கிளை.
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
0 comments :
Post a Comment