முஷர்ரப் எம்பி சொல்லாத எதனையும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறவில்லை - ஸப்வான் சல்மான்



ஸ்லாமிய திருமண சட்டத்தில் எவ்வித திருத்தமும் தேவையில்லை என்று கூறுவதே இலங்கைத் திருநாட்டில் எமது மூதாதையர்கள் எமக்காக பெற்றுத்தந்த உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கான ஒரே வழி.

இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்று இனவாத சக்திகள் பேசுவதற்கு காரணம் எமது சமூகம்தான்.

எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை அல்லது ஒரு சில காதி நீதிபதிகள் செய்த தவறுகளை பிற சமூகத்தாரிடம் அல்லது இனவாதிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண நாடி எது அல்லது அவர்களின் குறையை மறைக்க நினைத்தது தான் இனவாதிகளை இஸ்லாமிய திருமண சட்டம் பற்றி பேச வைத்தது.
அது மட்டுமல்லாமல் பெண்ணுரிமை பேசும் சில வெளிநாட்டு ஏஜென்ட்கள் இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று அப்போதைய நீதி அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் கோரிக்கை முன்வைத்து, அவர் அதனை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதி அளித்தமையே இன்று இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் தேவை என்ற விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

இஸ்லாத்தைப் பற்றியும் எமது நாட்டின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் பற்றியும் சரியான தெளிவில்லாதவர்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்ற விவகாரம் எவ்வாறு சமூகத்தில் எழுந்தது என்பது பற்றிய அறிவில்லாதவர்களும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களை விமர்சிப்பது வேடிக்கையான விடயமாக இருக்கிறது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக இஸ்லாமிய திருமண சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவது காலத்தின் தேவை என முஷர்ரப் எம்.பி அவர்கள் சுட்டிக் காட்டுவ‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் திரும‌ண ச‌ட்ட‌ம் குறித்த கோரிக்கை முஸ்லிம் ம‌க்க‌ளின் கோரிக்கை அல்ல‌ என்ப‌தை புரிய‌லாம்.
முஸ்லிம் திருமண சட்டம் இஸ்லாமிய திருமண சட்டம் அல்ல. இஸ்லாமிய திருமண சட்ட திருத்த‌ம் தேவை என்று சொல்ல வந்த முஷர்ரப், திருமண சட்டத்தில் தவறு உள்ளது என்று நிரூபிக்காமல் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் சட்டமாக இஸ்லாமிய திருமண சட்ட திருத்தங்கள் அமைய வேண்டும் என்று கூறுவதில் இருந்து வெளிநாட்டவர்களைத் திருப்திப் படுத்துவதே இவரின் பேச்சின் சாரம்சம் என்று தெளிவாகிறது.

அதேபோன்று இஸ்லாமிய திருமண சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி எந்த ஞானமும் இல்லாத ஒரு ஆலிம்(?) வரிந்து கட்டிக்கொண்டு முஷர்ரப் எம்.பி க்கு முட்டுக் கொடுக்க வந்திருக்கிறார்.
நீங்கள் முதலில் இஸ்லாமிய திருமண சட்டம் பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
யார் யாரோ என்னென்னமோ பேசுகிறார்கள் என்பதற்காக எமது முன்னோர்கள் எமக்காக பெற்றுத்தந்த தனியான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டிய எந்த தேவையும் இல்லை. உங்களின் பேச்சுக்களுக்கோ சர்வதேசத்தின் கட்டளைகளுக்கோ எமது மார்க்கத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட திருமண சட்டங்கள் உட்பட எமக்கு இலங்கை நாடு வழங்கியுள்ள எந்த உரிமையிலும் மாற்றங்கள் செய்ய எந்த முஸ்லிமும் முன்வரக்கூடாது என்பதை ஐக்கிய காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிக் கொள்கிறது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஷோர்ட் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி மிகச்சரியானது என்றும் அவர் பேசாத கருத்துக்களை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் பொய்யாக சொல்லி உள்ளார்கள் என்று கூறும் அசாம் மௌலவி மீண்டும் ஒருமுறை முஷர்ரப் எம்.பி யின் பேட்டியை கேட்க வேண்டும்.

இதோ முஷர்ரப் எம்பி கூறியதாக முபாரக் அப்துல் மஜீத் சுட்டிக் காட்டிய விடயங்கள்.

முஷ‌ர்ர‌ப் எம்பி சொல்லும் வார்த்தைக‌ள்.

"MMDA என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம் அல்ல‌, அது முஸ்லிம் ச‌ட்ட‌ம். அது ஷ‌ரீயா ச‌ட்ட‌மும் அல்ல‌" என்கிறார்.

நாம் கேட்கிறோம் ' முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம் இல்லையாயின் அது எப்ப‌டி முஸ்லிம் ச‌ட்ட‌மாக‌ ஆகும்? இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தில் இருந்து பெற‌ப்ப‌ட்ட‌தே முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌மே த‌விர‌ அது ஆங்கிலேய‌ர் ச‌ட்ட‌மோ வேறு ம‌த‌ ச‌ட்ட‌மோ அல்ல‌. முஸ்லிம் திரும‌ண‌த்துக்கு நிகாஹ் என்ற‌ வார்த்தை பிர‌யோகிப்ப‌திலிருந்தே அது இஸ்லாம்தான் என்ப‌து புரிய‌வில்லையே. போகிற‌ போக்கில் தொழுகை, நோன்பு போன்ற‌வையும் இஸ்லாம் அல்ல‌, அது முஸ்லிம் ச‌ட்ட‌ம் என்று சொன்னாலும் சொல்வ‌ர்.

முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌ம் வேறு முஸ்லிம் விவாக‌ விவாக‌ர‌த்து ச‌ட்ட‌ம் வேறு. முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்துக்குள் வ‌க்பு ச‌ட்ட‌ம் போன்ற‌வை வ‌ருகின்ற‌ன‌. அச்ச‌ட்ட‌ம் கூட‌ இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தை வைத்தே எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தை ச‌க‌ல‌ரும் தெரிந்து கொள்ள‌ வேண்டும்.

"ஒரு பிர‌ச்சினை வ‌ந்தால் ஒன்றில் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தை கொண்டோ அல்ல‌து பொதுச்ச‌ட்ட‌த்தை கொண்டோ தீர்ப்ப‌ளிக்க‌லாம் என‌ சொல்லியுள்ள‌தால் அது இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம் அல்ல‌ என்கிறார் முஷ‌ர்ர‌ப். இவ‌ர் இஸ்லாம் தெரியாத‌ ஒருவ‌ரா?

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ற‌ இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தை கொண்டு தீர்ப்ப‌ளிக்க‌லாம் என‌ இவ‌ர் சொல்லியுள்ள‌த‌ன் மூல‌ம் அது இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம்தான் என்ப‌து நிரூப‌ண‌மாகிற‌து.

இஸ்லாமிய‌ ச‌ட்ட‌த்தை ஏற்காத‌வ‌ர் பொதுச்ச‌ட்ட‌த்துக்கு செல்ல‌லாம் என‌ கூற‌ப்ப‌டுவ‌தும் " லா இக்ராஹ‌ பித்தீன்" மார்க்க‌த்தில் ப‌ல‌வ‌ந்த‌ம் இல்லை என்ற‌ இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ அடிப்ப‌டையில்தான்.

ஆக‌வே முஷ‌ர்ர‌ப் எம்பி சொல்லாத‌ எத‌னையும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் சொல்ல‌வில்லை என்ப‌தையும் அவ்வாறு அவ‌ர் சொல்லியிருந்தால் தான் சொல்லாத‌வ‌ற்றை முபாற‌க் அப்துல் ம‌ஜீத் சொல்லியுள்ளார் என்ற‌ ம‌றுப்பை முஷ‌ர்ர‌ப் எம்பி ஏன் இன்ன‌மும் வெளியிடாம‌ல் இருக்கிறார்?

ஆக‌வே முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் தாம் ஏன் பாராளும‌ன்றுக்கு சென்றோம் என்ப‌தை புரிந்து ஏழைக‌ளுக்கு சேவை செய்யுங்க‌ள்.

ஸப்வான் சல்மான்
கொள்கை பரப்புச் செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :