உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ”வானலைகளில் ஓரு வழிப்போக்கன்” அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழா நேற்று 03.06.2023 கொழும்பில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன், நுாலின் முதற்பிரதியை எக்ஸ்பிரஸ் நியுஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. குமார் நடேசன், பெற்றுக் கொண்டார்.
தலைமையுரை லண்டன் சட்டத்தரணியும் மற்றும் பீ.பீ.சி, அறிவிப்பு தயாரிப்பாளருமான விமல் சொக்கநாதன் நிகழ்த்தினார். சிறப்புரையை பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன், நூல் ஆய்வுரை பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன், நுால் விமர்சனத்தை ஊடகத்துறையில் கலாநிதி எம் ரஸ்மின், நிகழ்த்தினார். ஜி.போல் அந்தனி, திருமதி வசந்தி தயாபரன் ஆகியோறும் வாழ்த்துறைகளை நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்வில் அரசியல்வாதிகள், இலங்கை வானொலி தொலைக்காட்சி, விளம்பர அனுசரனையாளர்கள். இளம் ஊடகவியலாளர்கள், என பெருந்திரளனோர்கள் சமுகமளித்து பி.எச்.அப்துல் ஹமீதின் நுாலை வரிசையாக பெற்றுக் கொண்டனர். வருகை தந்த 400க்கும் மேற்பட்டோர்கள் நுால்களைப் பெற்றுக் கொண்ட சிறப்பம்சமாகும். அத்துடன் சகல நுால்களின் பி.எச். அப்துல் ஹமீட் தனது கையெழுத்திட்டு வழங்கியமையும் விசேட அம்சமாகும்.
பி.எச்.அப்துல் ஹமீத் பற்றி அங்கு உரையாற்றியவர்கள் பொதுவாகக் கூறியவை.
ஹமீதின் குரலில் ஒரு கனிவு, காந்தம் .கம்பீரம் அதை வைத்துக் கொண்டு அவர் தமிழ் பேசும் 8 கோடி மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கட்டிப்போடும் வல்லமையை பெற்றுள்ளார். . பி.எச். என்பது வெறும் ஒரு சொல்லல்ல அவருடைய சொற்சித்திர விளையாட்டுகளுக்கெல்லாம் இசைந்து கொடுக்கும் ஒர் மந்திரச்சொல். அவர் பெற்ற வரங்கள் வாழ்த்துக் கொண்டிருக்கும் சொத்துக்கள். இந்த நுால் வானொலி பற்றி அறிந்து கொள்ளக்கூடிய அத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு கட்டாய பதிவாகும். அவரது வானொலி வாழ்க்கை , உலக நாடுகளில் அவர் கண்ட அனுபவங்களை பதிவிட்டுள்ளார் இந் நுாலில் தனக்கு தமிழைக் கற்றுத் தந்த ஆசான்களை நினைவு கூறுகின்றார். அத்துடன் தனது தாய்க்கும் மனைவிக்கும் இந்த நுாலை சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே லண்டன், கனடா இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந் நுாலை அறிமுகம் செய்து இலங்கையில் நேற்று 03.06.2023 கொழும்பில் அறிமுக விழாவினை மிக நேர்த்தியாக ஒர் வானொலி கலைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் மலர் காலத்திலிருந்தே கணக்கிட்டால் ஆறு தசாப்த கலாமாக தலைமுறை மாற்றங்களை வியக்கத்தக்க மாற்றங்களைச் சந்தித்து அனுபவப் பதிவுகள் இந்நுாலில் அடக்கப் பெற்றுள்ளன. நடிப்புத்துறை, பாட்டுக்கு பாட்டு, இசையும் கதையும், பொதுஅறிவுப்போட்டி, நடிகர் திலகமே விரும்பிக் கேட்ட நாடகங்கள் என்று சிறந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார். பாட்டுக்கு பாட்டு அவரை தமிழ்த் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தி சன் .டி.வி, கலைஞர் டி.வி, ராஜ் டீ.வி, ஜெயா டி.வி எனக் கடந்த மூன்று தசாப்தங்களாக இவரது புகழ் உலகெங்கும் பரவ இந்தியத் தொலைக்காட்சிகளில் இவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக இருந்தன. தெனாலி படப்பிடிப்பில்போது நட்பு முறையில் யாழ்ப்பான பேசும் மொழி உச்சரிப்பை சரிபார்த்து அவற்றில் சில நிமிடம் திரையில் வந்து போனார்.தமிழ் பொப் இசைப் பாடல்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். நடிகர் திலகம் சிவஜிகனேசன், கமலகசன், எஸ.பி. பாலசுட்ிரமனியன், ஜெமினிகனேசன், போன்ற பல்வேறு இசை,பாடகர்கள், நடிகர்களையெல்லாம் இணைத்து அவர்களையெல்லாம் வானொலி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment