குமுக்கன் நதியில் களைகட்டிய பார்த்திபலிங்க அபிஷேக பூஜை!திருக்கைலாய யாத்திரையை பிரதிபலித்த பூஜை



கிழக்கின் தென் கோடியில் இயற்கையாக அமைந்த குமுக்கன் நதியில்
கடந்த பிரதோஷ வேளையில் வியாழக்கிழமை(16) மாலை மாபெரும் பார்த்திபலிங்க அபிஷேகம் நடாத்தப்பட்டது.

திருக்கைலாய யாத்திரையை பிரதிபலித்த இப் பூஜை வரலாற்றில் முதல் தடவையாக இங்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் நடைபெற்றது.

சுமார் ஆயிரம் கதிர்காம பாதயாத்திரை அடியார்கள் ஒன்றரை மணி நேரம் நதியில் அமிழ்ந்து இந்த அபிஷேக வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் நமசிவாய மகேஸ்வரன் சுவாமி வேல்சாமி தியாகராஜா சகா சுவாமி சிறில் சுவாமி தியாகராஜா சுவாமி உள்ளிட்ட பலர் முன்னணியில் இருந்து செயற்பட்டனர்.

அங்கு இவ் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி நதிக்குள் இருந்து பகிரங்கமாக சொற்பொழிவாற்றுகையில்...

*சிவாகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன அதி உன்னத வழிபாடு இந்த பார்த்திப லிங்க பூஜை. கலியுகத்திலே மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்றவரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார்.*
திருக்கேதாரத்திலே இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி சிவ பரம்பொருளின் உடலில் சரி பாதி பெற்று முத்தி பேறு அடைகிறார். அன்று முதல் ராமபிரான் ராவணேஸ்வரனை கொன்ற ப்ரமகத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் இதே வழிபாட்டை செய்து தான் தன் தோஷங்களை போக்கினார். இதே போல் சூரபத்மனை அழித்த போது முருக பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இதே வழிபாடை தான் திருகோணமலையில் மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து இலங்கை வேந்தன் ரராவனேஸ்வரன் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் செய்து இலங்கை வளநாட்டையே மாபெரும் சிவ பூமியாக ஸ்வர்ண பூமியாக மாற்றினான் என பல மிக பழமையான ராவண சம்கிதை, ராவண கட்கம், குமார தந்திரம் போன்ற கிரந்த நூல்களில் சொல்லபட்டுள்ளது.
குமுக்கன் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து பிரதோஷ வேளையில் செய்த பூஜை என்பது ஒரு சாதாரண பூஜை அல்ல... அது பிறவியை அறுக்கும் ஒரு மஹா சக்தி. இதை செய்தோர்க்கு இந்த பிறவியில் இனி பித்ரு தோஷங்களோ, கண்டங்களோ கிடையாது... இந்த ரகசியத்தை கூறுகிறார் என் மதிப்பிற்குரிய எங்கள் சித்தர்களின் குரல் குலகுரு வத்சாங்க குருக்கள் அவர்கள்.... இம்முறை பயணித்தவர்கள் எத்தனையோ ஜென்மத்து பாவங்களை கரைத்து விட்டார்கள். வராதவர்கள் அடுத்த வருடத்திலாவது பயணித்து இந்த வழிபாடுகளை செய்யுங்கள்...* *ஓம் நமசிவாய*
என்றார்.

*ஓம் ஸ்ரீ பவாய தேவாய நம: ஓம் ஸ்ரீ சர்வாய தேவாய நம: ஓம் ஸ்ரீ ருத்ராய தேவாய நம: ஓம் ஸ்ரீ பசுபதயே தேவாய நம: ஓம் ஸ்ரீ உக்ராய தேவாய நம: ஓம் ஸ்ரீ மகாதேவாய தேவாய நம: ஓம் ஸ்ரீ பீமாய தேவாய நம: ஓம் ஸ்ரீ ஈசாய தேவாய நம: என்ற உன்னதமான எட்டு சிவ பரம்பொருளின் நாமாக்களையாவது ஜெபித்து கொண்டு மணலிலே சிவலிங்கத்தை பிடித்து, பின் ஓடிக்கொண்டிருக்கின்ற கங்கையில் இடுப்பளவு நீரில் அனைவரும் சிவ சின்னங்களை தரித்து அமர்ந்து கொண்டு ஒரு கையில் சக்தி ஆயுதமான வேலும், மறு கையில் ஜெப மாலையும் வைத்துக்கொண்டு பிரதோஷம் முடியும் வரை காடே அதிர ஒரே பலத்த குரலில் பாவங்களை போக்கும் சிவ பஞ்சாட்சர ஜெபத்தை செய்தனர். கடைசியில் சிவபுராண பாராயணத்தை செய்து அந்த லிங்கத்தின் ஆவுடையை கங்கையில் கரைத்து, மேலுள்ள பான பாகத்தை அனைவரும் பூசி குளித்தால் எப்பேற்பட்ட பாவங்களும் அந்த மண் கரைவது போல கரைத்து விடும் என அன்னை பார்வதி தேவிக்கு பரமேஸ்வரனே சொல்கிறார்.
இந்த மாபெரும் வழிபாட்டை செய்பவர்கள், தரிசித்தவர்கள் மாபெரும் குபேர சம்பத்துகளையும் அனைத்து வல்லமைகளையும் பெருவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்த பூஜையை உலகில் மீண்டும் ஒருமுறை நடத்த முடியுமா..? என்பது ஒரு சந்தேகமான கேள்வி குறியே...

பார்த்திப லிங்க பூஜை செய்தவனை வெல்ல,
ஈரேழு பதினான்கு உலகத்திலும் ஆள் இல்லை என *- காரணாகமம்* கூறுகிறது.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :