சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடி விற்பனையில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் கூடுதல் நிதியினை சேகரித்து அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த மாவட்ட வெற்றியை கொண்டாடும் நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இன்று (22) வியாழக்கிழமை வங்கிச் சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ. சி.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாட், கருத்திட்ட உதவியாளர் எம்.எம் எம்.முபாறக், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத் தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கேக் வெட்டி வெற்றியின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் புதைத்தலுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் புகைத்தல் எதிர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.
கொடி விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்கிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் நன்றிகளைத் இதன்போது தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையினை மே-31 தொடக்கம் ஜூன்-14 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment