வளிமாசாக்கல் தொடர்பான துவிச்சக்கர வண்டி சவாரி !



வி.ரி.சகாதேவராஜா-
ளிமாசாக்கல் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துவிச்சக்கர வண்டி சவாரி களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம் பெற்றது.

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக
" பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் துவிச்சக்கர வண்டி சவாரி களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் "வளி மாசாக்கம் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம் "என்ற தொனிப் பொருளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துவிச்சக்கரவண்டி சவாரி நேற்று புதன்கிழமை (31/05/2023) முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் கணக்காளர் சா. விக்னராஜா ஆகியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன் நேற்றைய தினம் பல கிராம சேவகர் பிரிவுகளில் மர நடுகை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :