தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் கதிர்காம பாதயாத்திரை" தேசிய வேலைத்திட்டமான கதிர்காம பாதை யாத்திரை செல்லும் தமிழ், சிங்கள இளைஞர்களுக்கு இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் "தாகத்திற்கு நீர் போத்தல்" வழங்கி வரவேற்கும் நிகழ்வு நேற்று (13) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது வைத்தியசாலை முன்றலில் மாளிகா சந்தியில் இடம்பெறவுள்ளது.
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் அனுசரணையில் 200 இளைஞர்களுக்கு தாக சாந்திகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் டவலியு.ஜீ.ஏ. எஸ். தமயந்தி, சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமிழுள் இலாஹி, சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளரும், நாவிதன்வெளி பிரதேச செயலக நிதி உதவியாளருமான எம்.எஸ்.எம். முஜாஹித், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment