பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி முகாமைத்துவ பயிற்சித்திட்டம்



நூருல் ஹுதா உமர்-
டுப்பூசிகளை திறம்பட நிர்வகிப்பதில் பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் பொது சுகாதார மருத்துவச்சிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசி முகாமைத்துவம் தொடர்பான விரிவான பயிற்சித்திட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசாலின் ஏற்பாட்டில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புகழ்பெற்ற பிராந்திய தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால் வளவாளராக இந் நிகழ்ச்சியில் பங்காற்றினார். இத்துறையில் அவரது நிபுணத்துவமும் அனுபவமும் பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கியது. இந்த பயிற்சியானது தடுப்பூசி நிர்வாகத்தின் சேமிப்பு, விநியோகம், கண்காணிப்பு மற்றும் பாதகமான நிகழ்வு அறிக்கையிடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்தினூடாக ஒட்டுமொத்த தடுப்பூசி முகாமைத்துவ அமைப்பை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை திறம்பட வழங்குவதை உறுதி செய்யவும், இப்பகுதியில் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :