அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி!



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய மாணவர்களுக்கிடையிவான அறிவுக் களஞ்சியம் வினா விடை போட்டியில் இறுதிப் போட்டிகள் இன்று வாவிக்கரை பூங்கா திறந்த வெளி அரங்கில் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம்  தலைமையில் இடம் பெற்றது.

இவ் அரை இறுதிப் போட்டியில் மட்/மம/அறபா வித்தியாலயம், மட்/மம/அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், மட்/மம/அலிகார் தேசிய பாடசாலை, மட்/கலைமகள் வித்தியாலம் கலந்து கொண்டது.

இறுதிப் போட்டியில் மட்/அலிகார் மத்திய கல்லூரி மட்/ முனீறா பாலிகா மகா வித்தியாலய அணிகள் மோதிக் கொண்டது.

இதில் மட்/அலிகார் மத்திய கல்லூரி வெற்றி பெற்று மே மாதத்திற்கான "Genius school of the month - may 2023" விருதை தனதாக்கிக் கொண்டதோடு, ஒரு மாதத்திற்கு தேசிய செய்திப் பத்திரிகையொன்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது.

மாதாந்தம் இப்போட்டியை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஜூன் மாதத்திற்கான போட்டி அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளதாக ஏறாவூர் பொது நூலகர் எம்.எஸ்.எம் ஜௌபர் தெரிவித்தார்.

அத்தோடு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வருகைதந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.ஜே.எப் றிப்கா அவர்களும், கௌரவ அதிதிகளாக ஏறாவூர் வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் வை.எல்.எம் சலீம், செயலாளர் அல்ஹாஜ் எம்.ஐ.ஏ நாசர், பொருளாளர் அல்ஹாஜ் எம்.பீ.எம் றிஸ்வி மிஷாரி, விசேட அதிதிகளாக பாடசாலையின் அதிபர்களும், ஏறாவூர் நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஏறாவூர் நகரசபை நூலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வினா விடை போட்டியின் பிரதான நடுவராக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் நஸீர் அவர்கள் கடமை புரிந்தார்.

இப்போட்டிக்கான நிதி உதவிகளை ஏறாவூர் வர்த்தக சங்கம் வழங்கி யிருந்தமை குறிப்பிடத்தக்கது























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :