ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையில் தின்மக் கழிவுகளை மீள் சுழற்சித் திட்டம்



அஷ்ரப் ஏ சமத்-
க்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையில் தின்மக் கழிவுகளை மீள் சுழற்சித் திட்டத்தினை அன்மையில் மேல்மாகாணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்பொழுது 7.2 வீதமே கழிவுகள் மீள் சுழச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டம் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு புதிய திட்டமொன்று .ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் அனுசரனை வழங்குகின்றது. இலங்கையில் நாளாந்தம் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை விலை கொடுத்து வாங்கி அதனை மீள் சுழற்சி செய்து அத் திரவத்தினால் பல்வேறு வீட்டுப் பாவனைப் பொருட்கள் , மனித பாவனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அப் உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலவானி சம்பாதிக்கப்படுகின்றது. இந் நிதி இலங்கையின் பொருளாதாரத்துறைக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் . இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்ம் பற்றி ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் ்திட்டத்தின் ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் சூழல் மாசடைதலுக்கு பிரதான காரணமாக நாளந்தம் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் வகையான பொருட்கள் நிலங்களில் கொட்டப்படுகின்றன. . இக் கழிவுகள் இலங்கையில் நிலங்கள், கடலோரங்கள், வன வளங்கள், வாவிகள் இயற்கையான வளங்களில் கொட்டப்படும் போது இலங்கையின் சூற்றாடல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உயிரினங்கள் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டு வழிமண்டலமும் கெட்டுப்போகின்றன. .

இலங்கையில் மட்டும் 500.000 மெட்றிக் டொன் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்து வருகின்றது. இவைகள் நாளடைவில் 1.59 மில்லியன் டொன்கள் கடலிலும் வாவிகளிலும் இயற்கையான வன பிரதேசங்களிலும் கொட்டப்படுகின்றன. இதுவரை ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 33 வீதமான பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மாநகர , நகர பிரதேச சபைகளின் கீழ் உள்ள தின்மக் கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் 3 வீதமே மீள் சுழற்சி செய்யப்பட்டு வருகின்றன. இலஙகையில் ஒரு நாளைக்கு 10.786 டொன் பிளாஸ்டிக் கொட்டப்படுகின்றது.என தின்மக் கழிவு முகாமைத்துவமும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சீரான சுற்றாடல் திட்டத்திற்காக இலங்கை அரசுக்கு ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் மற்றும் தின்மங்களை சீராக்கி அதனை மீள் சுழற்சி செய்யப்பட்டும் ஒரு முன்மாதிரியான ரிக் டொக் திட்டம்மொன்றை ஆரம்பித்து வைத்துள்ளதாக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :