வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் இறுதி நிகழ்வான குளிர்த்தி பாடும் சடங்கு இன்று (6) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது.
இம் முறை வைகாசி திருக்குளிர்சி சடங்கு கடந்த மூன்று வருடகாலத்தைவிட ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..
இன்று அதிகாலை 4 மணியளவில் சடங்கு பூஜையும் திருக்குளிர்த்தி பாடலும் ஆரம்பமாகி காலை 5.30 மணியளவில் நிறைவுற்றது.
கடந்த 29 ஆம் தேதி கல்யாணக்கால் நடுதலுடன் ஒருவார காலமாக பறை மேளம் குழல் ஒலிக்க, கப்புகன்மார் முன்னிலையில், உடுக்கை ஒலியுடன் பக்தர்களின் அரோஹரா கோஷம் குரவை ஒலிக்கு மத்தியில் பகலில் பச்சை கட்டல் இரவில் ஊர்சுற்றுக்காவியம் பாடல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 12ஆம் திகதி எட்டாம் சடங்கு பூஜை இடம் பெறும்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment