சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவப்பரிசோதனையும் விழிப்புணர்வு செயலமர்வும் நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகரசபை செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர் எஸ்.எம் பிர்னாஸ் உட்பட தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரத்தப்பரிசோதனை உட்பட தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment