களியாட்டங்களை தவிர்த்து நல்லமல்களில் ஈடுபடுவோம்!-புரவலர் ஹாசீம் உமர்



றைகட்டளைகளுக்கு அடிபணிந்து இன்றைய தினம் தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும்; அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களதும் அன்னாரது குடும்பத்தாரினதும் தியாகங்களை இத்தியாகத்திருநாள் எமக்கு நினைவூட்டுகிறது. இந்நிலையில் இந்நெருக்கடியான காலத்தில் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை அர்ப்பணித்து மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.எனவே அதனை எமது வாழ்வில் கடைப்பிடித்து நடக்கவேண்டும்.

இதேவேளை சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நாம் நடந்து கொள்வதுடன் நாட்டின் சுபிட்சத்துக்காகவும் இன ஐக்கியத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும்.

இத்தியாகத் திருநாளில் நாம் வீண் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடாது நல்லமல்களில் ஈடுபடவேண்டும்.இறைவன் எங்களது நற்கிரியைகளை பொருந்திக்கொள்வானாக!
'ஈத் முபாரக்'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :