மட்டக்களப்பு- வாகரைப்பிரதேசத்தில் வெளிநாட்டு ஏற்றுமதிப்பயிரான பச்சைக் கக்கரிக்காய்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுனர் வாரைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து பச்சைக் கக்கரிக்காய் பதனிடும் தொழிற்சாலையினை பார்வையிட்டதுடன் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வாகரைப்பிரதேசத்தில் பயிரிடப்படும் பச்சைக்கக்கரிக்காய் அப்பிரதேசத்திலேயே பதனிடப்பட்டு ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 45 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இதனால் பச்சைக்கக்கரிக்காய் வெளிநாட்டு நாணயத்தினை பெற்றுத்தரும் பயிராகக் கருதப்படுகின்றது.
எனினும் விவசாயிகள் கக்கரிக்காய் செய்கைக்கைக்கான போதிய வசதியின்றி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து ஆளுனர் எதிர்வரும் சில தினங்களில் ஏற்றுமதியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment