மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை இலங்கைக்கு கொண்டு வருக! நேற்று வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம்!



வி.ரி.சகாதேவராஜா-
த்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஓமானில் சிக்கித் தவிக்கின்ற இலங்கைப் பணிப்பெண்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி கொண்டுவர வேண்டும் என்று கோரி நேற்று(1) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் பெண்கள் ஊர்வலத்துடன் போராட்டம் நடத்தினர்.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு முன்னணி என்ற அமைப்பு எட்டு மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தியது.
அந்தந்த பிரதேச செயலாளர்களிடமும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமும் மகஜகர்களை கையளித்துள்ளனர்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்துக்கான இந்தப் போராட்டம் நேற்று(2)ஆ
லையடிவேம்பில் கூட்டு முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரனின் தலைமையில் நடைபெற்றது .

அதன் போது மத்திய கிழக்கு நாடுகள் சிக்கித் தவிக்கும் குறிப்பாக ஓமானில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களை உடனடியாக விடுவித்து நாட்டுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் வேண்டும் என்று கோஷம் எழுப்பியதுடன் பதாகைகளை ஏந்தி நின்றனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :