சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் நினைவேந்தல் நிகழ்வு



ஏ.எம்.அஸ்லம்-
காலம்சென்ற சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தொடர்பான நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (19) மாலை, கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

மர்ஹூம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரிடம் கல்வி கற்ற மாணவிகள் குழுவொன்றினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சிரேஷ் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுப் பேருரையை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர் நிகழ்த்தினார்.

அத்துடன் அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எச்.ஆர். மஜீதியா மற்றும் காமிலா காரியப்பர் ஆகியோர் நினைவுக் கவிதை வாசித்தனர். காத்தான்குடி ஸாவியா மகளிர் கல்லூரியின் பிரதி அதிபர் எம்.வை.எம்.இம்ரான், வை.எல்.எஸ்.ஹமீதின் பொது வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தொகுப்புரையை நிகழ்த்தினார்.

அல்ஹாபிழ் எம்.ஐ.எம்.றியாஸ் மெளலவி விஷேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார். வை.எல்.எஸ்.ஹமீதின் குடும்பத்தினர் சார்பில் அவரது இளைய சகோதரரான டாக்டர் வை.எல்.எம்.யூசுப் ஏற்புரை நிகழ்த்தினார்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :