ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல்



ஹஸ்பர்-
கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று கிண்ணியா பிரதேச சபை மண்டபத்தில் இன்று (08)இடம் பெற்றது.

குறித்த நிகழ்வினை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புக்கள், மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் ஊடாக உண்மைத் தன்மை வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் போன்றவற்றை வைத்து திறம்பட எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த திட்டமானது கிண்ணியா,தம்பலகாமம்,குச்சவெளி, கந்தளாய்,வாகரை போன்ற பிரதேச சபை எல்லைகளை உள்ளடக்கிய வகையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இணங்கண்டு இதற்காக மக்கள் பங்கேற்பும் வெளிப்படை தன்மை தொடர்பிலும் குறித்த சமூக மட்ட நிறுவனங்கள் ஊடகவியலாளர்களின் ஒத்தாசையுடன் செயற்பட உள்வாங்கப்பட்டுள்ளது.மக்கள் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அடிப்படையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. சிவில் சமூகத்தவர்கள் ஊடகவியலாளர்கள் இதன்போது பிரதேச சபையிர் பணி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதில் கிண்ணியா பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் இ.கலைமதி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.நஜாத், அகம் மனிதாபிமான வள நிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன்,அகம் மனிதாபிமான வள நிலைய திட்ட ஆலோசகர் என்.மிதுனாளன் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்,கிண்ணியா பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :