பாஸ்போட் கிளைக்காரியால‌ய‌ம் ஒன்றை அல்ல‌து விண்ண‌ப்பித்து கையொப்ப‌மிடும் வ‌ச‌தியை க‌ல்முனையில் அமைக்குக. ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி



கிழ‌க்கு மாகாண‌ ம‌க்க‌ளுக்கு உத‌வும் வ‌கையில் பாஸ்போட் கிளைக்காரியால‌ய‌ம் ஒன்றை அல்ல‌து விண்ண‌ப்பித்து கையொப்ப‌மிடும் வ‌ச‌தியை க‌ல்முனையில் அமைக்கும்ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை மீண்டும் கேட்டுக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,
.நாட்டில் பொருளாதார‌ க‌ஷ்ட‌ங்க‌ள் இருக்கும் நிலையில் கிழ‌க்கு மாகாண‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் கொழும்புக்கு சென்று பாஸ்போட்டை பெற‌ விண்ண‌ப்பிக்க‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் செல‌வு செய்ய‌ வேண்டியுள்ள‌து.

இந்நிலையில் கிழ‌க்கு மாகாண‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை அளிக்கும் வ‌கையில் பாஸ்போட் கிளைக்காரியால‌ய‌ம் அமைக்கும்ப‌டி க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியை க‌டித‌ம் மூல‌ம் கோரினோம்.

த‌ற்போது பாஸ்போட் பெற‌ விரும்புவோர் அம்பாரை மாவ‌ட்ட‌த்தின் ச‌ம்மாந்துறை, பொத்துவில் ஆகிய‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ளில் கையொப்ப‌மிட‌ முடியும் என‌ அர‌சு அறிவித்துள்ள‌மை ஓர‌ள‌வு ஆறுத‌ல் த‌ரும் விட‌ய‌மாகும்.

ஆனாலும் அதிக‌ ச‌ன‌த்தொகையும், பின் த‌ங்கிய‌ கொல‌ணி போன்ற‌ பிர‌தேச‌ங்களை அண்மித்த‌துமான‌ கிழ‌க்கின் முக‌வெற்றிலை என‌ அறிய‌ப்ப‌ட்ட‌ க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்துக்கும் இத‌ற்கான‌ அனும‌தியை வ‌ழ‌ங்கும்ப‌டி கௌர‌வ‌ ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :