ஜனநாயக கட்டமைப்பில் நான்காவது தூணாக சுதந்திர ஊடகம் அமைவதாகவும், நிறைவேற்று,சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை தடைகள் மற்றும் சமன்பாடுகள் பலப்படுத்தி ஜனநாயக கட்டமைப்பை பேணுவது போன்று நான்காவதாக தடைகள் மற்றும் சமன்பாடுகளை பேணுவதாக சுதந்திர ஊடகங்கள் அமைவதை உலகமே
ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இவ்வாறான ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலங்கள் மூலம் சுதந்திர ஊடகங்களை அழிக்கத் தயாராக உள்ளதாகவும்,1997 இல், அப்போதைய அரசாங்கம் இதேபோன்ற சட்ட மூலத்தை சமர்ப்பித்த போது,மே 5,1997 இல், ஏ.ஆர்.பி.அமரசிங்க உயர்நீதிமன்ற நீதியரசர் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்,அன்று போலவே இப்போதும் முன்வைத்திருக்கும் இந்த சட்ட மூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது எனவும்,
ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும்,ஜனநாயகத்தை சீர்குழைக்கும்,குழிதோண்டி புதைக்கும், மக்களின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் சட்ட மூலம் எனவும்,இச்சந்தர்ப்பத்தில் அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த ஒருதலைபட்சமான,
கடுமையான மற்றும் முட்டாள்தனமான ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும்,சுதந்திர ஊடகங்களின் இருப்பை பேண வேண்டும் எனவும், பாதுகாக்கப்பட வேண்டும் எனவும்,இந்நாட்டில் ஜனநாயக கட்டமைப்புக்கு விடுக்கப்படும் மரண அடி தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் பல்வேறு விருந்துபசாரங்கள் நடத்தி நீதிபதிகளை மிகவும் அசௌகரியத்திற்கு ஆளாக்கியுள்ளதகவும்,மிக முக்கியமான நீதிமன்ற விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற விருந்துபசாரங்களை நடாத்துவது முட்டாள்தனமானதொரு செயல் எனவும்,எனவே,சுதந்திரமான நீதித்துறை மற்றும் பாரபட்சமற்ற நீதிபதிகள் மீது இத்தகைய அழுத்தத்தை பிரயோகிக்கக் கூடாது எனவும், நாட்டு மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல்,நமது நாட்டில் ஜனநாயக விரோத செயல்கள் போன்றே சர்வாதிகாரம்,
ஏகாதிபயத்தியத்திற்கும் இடமில்லை எனவும்,
ஜனநாயகத்தை பாதுகாக்க முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment