கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கணித ஒலிம்பியாட் (Olympiad) போட்டி அண்மையில் இடம்பெற்றது. மேற்குறித்த போட்டி நிகழ்ச்சியில் அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட ஜே.இஸ்ஸத் பானு, எம்.எம்.அஹமட் ஆகியோர் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.
குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றிபெற்று தமது வலயத்திற்கும் பாடசாலைக்கும், பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment