ஓய்வு பெற்ற உதவி கல்விப்பணிப்பாளர் வரதராஜனுக்கு பாராட்டு விழா!



வி.ரி.சகாதேவராஜா-
35 வருட கால கல்விச் சேவையாற்றிய பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன், 58 வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று(7) புதன்கிழமை நடாத்தப்பட்டது .

அவர் சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 1991/92 அணியினர் இந்த பாராட்டு விழாவை களுவாஞ்சிக்குடியில் விமரிசியாக நடத்தினர்.

அந்த அணியின் தலைவர் உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில், கவிமணி எஸ். புண்ணியமூர்த்தி எழுதிய "பூச்சொரியும் புலனத்து நட்சத்திரங்கள்" என்ற கவிவாழ்த்து மடலை கவிஞர் ஆ.புட்கரன் வாசித்துஅளித்தார்.

அணியின் லண்டன் நண்பர் நடராஜா இணை அனுசரணை வழங்கியிருந்தார்.
வரதராஜனின் தாயார் திருமதி பாலசுந்தரம் நடுநயமாக இருக்க நண்பர்கள் சூழ இருந்து வாழ்த்துரைகளை வழங்கினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :