அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடும் ஹஜ் பெருநாளானது எமக்கு பல விடயங்களை போதித்துச் செல்கிறது. இறைத்தூதர் இப்றாஹிம் அலைஹிவஸல்லம் அவர்கள் ஏக இறைவனுக்கு எதையும் இணைவைந்து விடக்கூடாது என்பதற்காக பட்ட கஷ்டங்களை நாம் வாழ்வில் ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இறைவனின் வார்த்தை அவர்காட்டிய மதிப்பும் மரியாதையும் இன்று வரை கோடானு கோடி மக்களை புனித மக்காவை நோக்கி நகரவைத்துள்ளது என்பதை எண்ணும் பொழுது பக்தி மேலிடுகிறது.
இறைத்தூதர் இப்றாஹிம் அலைஹிவஸல்லம் அவர்களும் அவர் குடும்பமும் அல்லாஹுக்காக பட்ட துயரங்களையும், பிரயத்தனங்களையும், தியாகங்களையும் ஹஜ் கடமைகளாக ஹாஜிகள் அனுஷ்டிக்கின்றனர்.
இந்த தியாகத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் பரிசளித்துச் செல்லட்டும்
உலகெலாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.
ஸ்தாபக தலைவர்
நளீர் பவுண்டேஷன்
LFRO
கிழக்கு மாகாண தலைவர்
C M T Campus
Director
நளீர் பவுண்டேஷன்
LFRO
கிழக்கு மாகாண தலைவர்
C M T Campus
Director
0 comments :
Post a Comment