சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்



மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கு சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்
லங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், தீர்வுகளை பெறுவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் நாட்டில் நீர் மற்றும் சுகாதாரத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தேசிய முயற்சியை வலுப்படுத்துவதகு அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலான்று இடம்பெற்றுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (11.06.2023) நீர் வழங்கல் சபையின் புதிய கட்டிடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதிகளாக சீன ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அகாடமி பேராசிரியர் Min Yang, பேராசிரியர் Wei Yuansong , பேராசிரியர் Yawei Wang உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதற்காக உலகின் அதியுயர் தொழில்நுட்பத்தை வழங்கி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடங்கள், புதிய ஆராய்ச்சி சாதனங்கள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற சீனாவின் நடவடிக்கைக்கு அரசின் சார்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றிகளை தெரிவித்தார்.

சீன - இலங்கை கூட்டு நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் நீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை மக்களின் சார்பில் சீனாவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :