கிழக்கு மாகாண ஆளுநரை கௌரவித்த சிலோன் மீடியா போரம் !



மாளிகைக்காடு நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை சிலோன் மீடியா போரம் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி வாழ்த்தி கௌரவித்தது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை அம்பாறை ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே இந்த கௌரவிப்பு நடைபெற்றதுடன் கிழக்கு ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள், தேவைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டதுடன், கிழக்கிலிருந்து வெளியாகும் பத்திரிகையின் சிறப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கௌரவிப்பு நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவரும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி றியாத் ஏ மஜீட், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் பிரதித்தலைவரும், ஆசிரியருமான எஸ். அஸ்ரப்கான், சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர் பைசால் இஸ்மாயில், உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :