இன்று வேலோடுமலையிலிருந்து ஆயிரம் வேல் தாங்கிய பக்தர்களின் மாபெரும் கதிர்காம வேல்யாத்திரை ஆரம்பம்! சித்தர்கள் குரல் சங்கர் ஜி ஏற்பாடு!



காரைதீவு சகா-
1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரை வரலாற்றில் முதல் தடவையாக இன்று (13) செவ்வாய்க்கிழமை வேலோடுமலையிலிருந்து சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் ஆரம்பமாகின்றது.

இந்த மாபெரும் வேல் யாத்திரையை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் ஆதீனகர்த்தா முருகஸ்ரீ தியாகராஜா ஆசிரியர் வேல்சாமியாக இருந்து இவ்வருடம் முதல் யாத்திரையை தலைமையேற்று நடத்துகிறார்.

திருமூலர் பெருமானின் அருளாசியுடன், சித்தர்களின் குரல் சிவசங்கர் குருஜியின் நேரடி வழிகாட்டலின் கீழ் இவ்வருடத்தில் இருந்து 1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரையாக, கதிர்காமம் நோக்கி கந்தனை தரிசிக்க வேலோடு மலையில் இருந்து "பாத யாத்திரை" தொடங்குகிறது.

அதற்குரிய சம்பிரதாய வழிபாடுகள் அனைத்தும் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையில் கடந்த சனிக்கிழமை பௌர்ணமி தினம் வேலோடுமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.

வேலோடுமலையிலிருந்து சிறப்பு பூஜைகள் சகிதம் வேல்யாத்திரை ஆரம்பமாகி சித்தாண்டி முருகன் ஆலயம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை தரிசித்து உகந்தை மலை முருகன் ஆலயத்தை பஸ்களில் சென்றடைவர். இன்றிரவு அங்கு அடியார்கள் தங்கியிருப்பர்.

நாளை 14ஆம் திகதி புதன்கிழமை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து இவ் ஆறு நாட்கள் வேல் யாத்திரை முறைப்படி ஆரம்பமாகின்றது.19ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் கதிர்காமத்தை சென்றடையும்.

அனைத்து நாட்களும் யாத்திரீகர்கள் அனைவருக்கும் மூன்று வேளை சாத்வீக உணவும், இரண்டு வேளை தேனீரும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

அனைத்து ஏற்பாடுகளையும் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன் ஆகியோரின் நேரடி ஏற்பாட்டின் கீழ் நடைபெறுகிறது.

தினமும் ஒவ்வொரு இடங்களிலும்,
*(01) சக்தி வாய்ந்த வேல் பூஜை,*
*(02) அபூர்வ வன மூலிகைகளினால் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி,*
*(03) வன பூஜை, வன போஜனம்*
*(04) மூலிகை குளியல்,*
*(05) ஒரு கோடி சண்முக பஞ்சாட்சர ஜெபம்,*
*(06) கூட்டு வழிபாடுகள், நமது கர்ம வினைகளை கரைக்கும் அற்புதமான தியானங்கள், திருப்புகழ் பாராயணங்கள் இடம் பெறும்.



இவ்வருட கதிர்காம பாத யாத்திரை நிகழ்ச்சி நிரல்:-

*14/06/2023 புதன்கிழமை முதலாம் நாள்:-*

*நண்பகல் 11 மணிக்கு "உகந்தை" மலையில் பயணம் சிறப்பாக அமைய, வேல் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு, உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற மஹா சங்கல்பம் செய்யப்பட்டு ஜெபமாலை அணிவிக்கப்பட்டு காப்பு கட்டும் நிகழ்வு....*
*பிற்பகல் 2 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பம். உகந்தை மலையில் இருந்து 8KM பயணித்து வாகூர வெட்டை என்கிற "வண்ணாத்தி வெட்டை" நோக்கி பயணித்தல்.*
*மாலையில் வண்ணாத்தி வெட்டையை அடைதல். மாலையில் ஆற்றில் குளித்து விட்டு தேநீர் அருந்தி விட்டு இரவு 7 மணியளவில் இரவு உணவு அருந்துதல்.*
*இரவு 9 மணிக்கு முருக பெருமான் தங்கிய முதலாவது இடமான "வண்ணாத்தி வெட்டை" என்ற கிணத்தடியில் "கருப்பண்ண சாமி" என்ற காவல் சக்திகளை பூஜித்து, அவைகளின் வரங்களை அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, 1008 பஞ்சாட்சர ஜெபம், பஞ்ச பூதங்களில் முதல் பூதமான பூமியில் சக்தியை பெறும் "தபஸ்" என்கிற ஆழ்நிலை தியானம்.*

*15/06/2023 வியாழக்கிழமை இரண்டாம் நாள்:-*
*காலை 6 மணிக்கு காலை கடன்களை முடித்து தேநீர் அருந்தி விட்டு காலை உணவை எடுத்து காலை வழிபாடுகளை முடித்துக் கொண்டு 11KM பயணித்து பறவைக்குளம் குமண சரணாலயம் வழியாக குமுக்கன் ஆற்றங்கரையை அடைதல்.*
*நண்பகல் 12 மணிக்கு புண்ணிய நதியாக குமுக்கன் ஆற்றில் மரகத லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், புனித நீராடுதல் வைபவம்.*
*நண்பகல் 1 மணிக்கு மதிய உணவை எடுத்தல், ஓய்வெடுத்தல். மாலை தேநீர் அருந்தி விட்டு இரவு 7 மணியளவில் இரவு உணவு அருந்துதல்*
*இரவு 9 மணிக்கு முருக பெருமான் தங்கிய இரண்டாவது இடமான காளிகா வனம் என்று சித்தர்களால் போற்றப்படுகின்ற "குமுக்கன்" ஆற்றங்கரையில்" வன தேவதைகளான "காளி" காவல் சக்திகளை பூஜித்து, அவைகளின் வரங்களை பெறுதல். அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, 1008 பஞ்சாட்சர ஜெபம், பஞ்ச பூதங்களில் இரண்டாவதாக பூதமாகிய நீரில் சக்தியை பெறும் "தபஸ்" என்கிற ஆழ்நிலை தியானம்.*

*16/06/2023 வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள்:-*
*காலை 6 மணிக்கு காலை கடன்களை முடித்து தேநீர் அருந்தி விட்டு காலை உணவை எடுத்து காலை வழிபாடுகளை முடித்துக் கொண்டு குமுக்கன் ஆற்றை 17KM பயணித்து உப்பாற்றில் குளித்து நாவலடி மண்ணை அடைதல்.*
*நண்பகல் 1 மணிக்கு மதிய உணவை எடுத்தல், ஓய்வெடுத்தல். மாலை தேநீர் அருந்தி விட்டு இரவு 7 மணியளவில் இரவு உணவு அருந்துதல்.*
*இரவு 9 மணிக்கு முருக பெருமான் தங்கிய மூன்றாவது இடமான ஆமானுஷ்ய பூமியான "நாவலடி" பைரவ வனத்தில் பாதாள "பைரவ" சக்திகளை பூஜித்து, அவைகளின் வரங்களை பெறுதல். அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, 1008 பஞ்சாட்சர ஜெபம், பஞ்ச பூதங்களில் மூன்றாவது பூதமாகிய "அக்னியின்" சக்தியை பெறும் "தபஸ்" என்கிற ஆழ்நிலை தியானம்.*

*17/06/2023 சனிக்கிழமை நான்காம் நாள்:-*
*காலை 6 மணிக்கு காலை கடன்களை முடித்து தேநீர் அருந்தி விட்டு காலை உணவை எடுத்து காலை வழிபாடுகளை முடித்துக் கொண்டு நாவலடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்து 17KM பயணித்து மதிய உணவை இடையில் உட்கொண்டு வியாழை ஆற்றங்கரையை அடைதல்.*
*பிற்பகல் 3 மணிக்கு புண்ணிய நதியாக வியாழை ஆற்றில் பாரம்பரிய சம்பிரதாக முறைப்படி ஏழு பூவல் கிணறுகள் அமைத்து ஏழு புண்ணிய நதிகளை பூஜித்து மரகத லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், மூலிகை குளியல், சாம்பிரதாய புனித நீராடுதல் மஹா வைபவம்.*
*மாலை தேநீர் அருந்தி விட்டு இரவு 7 மணியளவில் இரவு உணவு அருந்துதல்.*
*இரவு 9 மணிக்கு முருக பெருமான் தங்கிய நான்காவது இடமான "யாள" ஆற்றங்கரையில் "நாக" சக்திகளை பூஜித்து, அவைகளிடமிருந்து வரங்களை பெறுதல்.*
*அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, 1008 பஞ்சாட்சர ஜெபம், பஞ்ச பூதங்களில் நான்காவது பூதமாகின "காற்றின்" சக்தியை பெறும் "தபஸ்" என்கிற ஆழ்நிலை தியானம்.*

*18/06/2023 ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் நாள்:-*

*காலை 6 மணிக்கு காலை கடன்களை முடித்து தேநீர் அருந்தி விட்டு காலை உணவை எடுத்து காலை வழிபாடுகளை முடித்துக் கொண்டு வியாழை ஆற்றங்கரையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து 8KM பயணித்து வள்ளியாற்றை அடைதல்.*
*நண்பகல் மதிய உணவை அருந்துதல். ஓய்வெடுத்தல். மாலை தேநீர் அருந்தி விட்டு இரவு 7 மணியளவில் இரவு உணவு அருந்துதல்.*
*இரவு 9 மணிக்கு முருக பெருமான் தங்கிய ஐந்தாவது இடமான "வள்ளியாற்று" ஆற்றங்கரையில் "வான தேவதைகளை" பூஜித்து, அவைகளிடமிருந்து வரங்களை பெறுதல். அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, 1008 பஞ்சாட்சர ஜெபம், பஞ்ச பூதங்களில் ஐந்தாவது பூதமான "ஆகாயத்தின்" சக்தியை பெறும் "தபஸ்" என்கிற ஆழ்நிலை தியானம்.*

*19/06/2023 திங்கட்கிழமை ஆறாம் நாள்:-*

*காலை 6 மணிக்கு காலை கடன்களை முடித்து தேநீர் அருந்தி விட்டு காலை வழிபாடுகளை முடித்துக் கொண்டு வள்ளியாற்றங்கரையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து 12KM பயணித்து கட்டகாமத்தை அடைதல். காலை உணவை அருந்துதல் அங்கிருந்து 11KM பயணித்து பிள்ளையாரடி காட்டு பிள்ளையார் ஊடாக கதிர்காம மண்ணை அடைதல்.*
*கதிர்காமத்தில் சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து கதிர்காம பாதயாத்திரையை பூர்த்தி செய்தல்.*


*(01) அனைத்து ஏற்பாடுங்களும் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணை தலைவர் மனோகரன் ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெறும்.*
*(02) எங்களுடன் பயணிப்பவர்கள் 14ம் திகதி காலையில் உகந்தைக்கு வரவும்.*
*(03) இது சுற்றுலா பாதை அல்ல.. இறைவனே இயற்கையை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஒரு புதிதாக ஆன்மீக யாத்திரை, பக்தி கலாச்சார நெறிகளை கடைபிடிக்கவும்.*
*(04) அனைவரும் கட்டாயம் ஆறு நாட்களும் காவி உடையிலேயே வர, பயணிக்க வேண்டும்.*
*(05) பயணத்தின் வரும் அனைவர்க்கும் இரண்டு வேளை தேநீர், மூன்று வேளையும் எங்கள் சித்தர்களின் குரல் சமஸ்தான நாளபாக சக்கரவத்தி மதி அவர்களின் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் அற்புதமான உணவு வழங்கப்படும்.*
*(06) ஆறு நாட்களும் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, "ஒரு கோடி சுப்ரம்மணிய பஞ்சாட்சர ஜெபம்", ஆழ்நிலை தியானம், தினமும் அற்புதமான ஆன்மீக அறிஞர்களின் சொற்பொழிவு என ஒரு உயர்த்த பக்தி நிலைக்கு அழைத்து செல்லும் பயணம் இது....*
*(07) அனைவரும் உங்களுக்குரிய வேல், ஜெபமாலை, பிளேட், டம்ளர், அமர இரண்டு மீட்டர் பொலித்தீன் க்ளோத் என்பவற்றை கட்டாயம் கொண்டு வரவும்....*

*மேலதிக தகவல்களுக்கு:-*
*தலைவர் - ஆதித்தன் (+94 77 313 8048)*
*துணைதலைவர் - மனோகரன் (+94 77 119 2223)*
*ஆலோசகர் - மகேஸ்வரன் சுவாமிகள் (+94 77 639 2368)*

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆலோசகர்

காரைதீவு குறூப் நிருபர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :