இலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவிகள் சங்கத்திற்கான வருடாந்த பொதுக்கூட்டம் பாடசாலையின் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் கல்லூரி அதிபர் யூ.எல். அமீன் தலைமையில் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் உட்பட பழைய மாணவிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் நடைபெற்றது.
இந்த பழைய மாணவிகள் சங்கத்திற்கான வருடாந்த பொதுக்கூட்டத்தில் பாடசாலை கல்வி, பௌதீக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதில் பதவி வழியாக பாடசாலை முதல்வர் யூ. எல்.அமீன் தலைவராகவும், செயலாளராக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க உப தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பரும், பொருளாளராக விரிவுரையாளர் ஏ.பி.எஸ். றிகானா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் உப தலைவராக ஷாமிலா ஜஹ்பர், உப செயலாளராக எம்.எம். உம்மு ஹபீபா, உப பொருளாளராக ஏ.சி. பஸ்லுனா, கணக்காய்வாளராக எம்.எம். சியாதா ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எச்.சித்தி சபீனா, எம்.ஐ. சபானா, ஏ.எச். ஜெஷ்மின் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய நிர்வாகம் எதிர்கால பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
0 comments :
Post a Comment