அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனைக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் !



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனைக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனைக்கிளை உப தலைவர் எம்.எஸ். அப்துல் மலிக் தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர். எம்.பி. அப்துல் வாஜித் கலந்து கொண்டார். மேலும் பல பிராந்திய பணிமனை பிரிவுத்தலைவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலர் விரைவில் ஓய்வு பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி தொழிற்சங்கம் அவர்களுக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னங்களை வழங்கியது. பொது சுகாதாரத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளின் பங்களிப்புகளுக்கு தொழிற்சங்கத்தின் நன்றியை தெரிவித்த அவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பிலும் இங்கு உரை நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :