கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா? திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஏ. அப்துல் கபூர் கேள்வி



பாறுக் ஷிஹான்-
றைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடனும் மர்ஹும் மன்சூருடனும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்த கல்முனைத் தொகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி பிரம்மதாசாவின் மகன் எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவிருக்கும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஆட்சிக்கு உடன் அமர்த்த ஆயத்தம் ஆகிவிட்டார்கள். உங்கள் கட்சி எதிர் காலத்தில் ஆட்சிக்கு வந்தால் கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா? என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. அப்துல் கபூர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

இதற்கமைய கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். எஸ். எம் அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் ஸாஹிபு வீதியிலுள்ள கட்சியின் கல்முனைத்தொகுதி காரியாலயத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் திங்கட்கிழமை(12) மாலை கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் கட்சியின் உறுப்புரிமை அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய அங்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. அப்துல் கபூர் உங்கள் கட்சி எதிர் காலத்தில் ஆட்சிக்கு வந்தால் கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா? என்று க்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பார்த்த கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸஅத்தநாயக்க அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச தொகுதிகளான கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது அதிக அளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் எனவும் அதற்கான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார். இந்த விஜயத்தின் போது கல்முனைத் தொகுதிக்கு வருகை தந்த திஸஸ்அத்தநாயக்க கல்முனைத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி றஸ்ஸாக் அவர்களது கல்முனை காரியத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கல்முனைத் தொகுதியில் உள்ள 72 வாக்குச்சாவடிகளுக்கான குழுக்களை அமைத்து வாக்குகளை அதிகம் பெறுவதற்குரிய விரிவான விளக்கங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினார். இக் கலந்துரையாடல்க் கூட்டத்தில் கல்முனைக்குடி, மருதமுனை சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பெருவளவில் கலந்து கொண்டதுடன் முன்னாள் கல்முனைப் பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஏ. அப்துல் கபூர், கல்முனைக்குடியைச் சேர்ந்த எம். எம். எம். ஜெமில், ஏ.எல். சலீம் ஆகியவர்களும் கலந்து கொண்டனர். சட்டத்தரணி றஸ்ஸாக் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலக் கூட்டத்தில் இறுதியில் ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரிடம் கேள்வி கேட்கும் நேரத்தில் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ. அப்துல் கபூர் பேசும்போது முன்னாள் அமைச்சர் மர்ஹும் AR.மன்சூர் 17 ஆண்டுகாலம் ஜக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதி பிரமதாசாவுடன் மிக நெருக்கமாக இருந்து கல்முனை மக்களுக்கு பல அபிவிருத்தி வேலைகளைச் செய்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியை கல்முனைப் பிரதேசத்தில் வளர்ச்சி அடைய செய்தார். அவரது மறைவுக்குப் பின் அவரது ஆதரவாளர்கள் அனாதைகளாக்கப்பட்டனர். மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவுடனும் மர்ஹும் மன்சூருடனும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்த கல்முனைத் தொகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி பிரம்மதாசாவின் மகன் எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவிருக்கும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஆட்சிக்கு உடன் அமர்த்த ஆயத்தம் ஆகிவிட்டார்கள். உங்கள் கட்சி எதிர் காலத்தில் ஆட்சிக்கு வந்தால் கல்முனைத் தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பீர்களா? என்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. அப்துல் கபூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தேசிய அமைப்பாளர் திஸ்அத்தநாயக்கா இக்கோரிக்கையை கட்சி தலைமைக்கு எடுத்துக் கூறுவதாக பதிலளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :