ஓட்டமாவடியில் நீதி கேட்டு போராட்டம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபை உதவிக் கொடுப்பனவு பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படாத பொதுமக்கள் இன்று (26) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலை, காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்" ஏழை, எளிய வறிய மக்களுக்கு அஸ்வெசும் திட்டம் வழங்கப்பட வேண்டும் "எடுக்க வேண்டும் எங்கள் கிராமத்தை கவனமெடுக்க வேண்டும்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் போராட்டம் செய்தனர்.

ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பிரதேச செயலகம் வரை சென்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :