ஏறாவூரில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..



உமர் அறபாத்-
விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (08) ஏறாவூர் 2 கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இந்நிகழ்வானது ஏறாவூர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி சாபிறா வஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச். பழீல், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், டெங்கு கள உதவியாளர்கள் , ஏறாவூர் நகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு மேற்பார்வையாளர் எம். அசனார், வட்டார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் , WRDS, RDS உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவ்விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் - 2 பகுதியில் சுமார் 10 குழுக்கள் மூலம் களப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு மேலும் சில வீட்டு உரிமையாளர்களுக்கு டெங்கு தடுப்புச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :