ஹற்றன் நாசனல் வங்கியின்(HNB) சமூக மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேசத்தில் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
காரைதீவு ஹற்றன் நாஷனல் வங்கியின் முகாமையாளர் கே.ஜெயபாலன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக வங்கியின் பிராந்திய முகாமையார் என் .கேதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸிமா பஷீர் கௌரவ அதிதியாகவும், வங்கியின் பிராந்திய கடன் பிரிவுத் தலைவர் எஸ்.சத்தியசீலன், பிராந்திய கடன் அறவீட்டுப்பிரிவுத் தலைவர் ஏ.எல்.சிறாஜ் அகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான மாதாந்த உலர் உணவுப்பொதிகள் சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக தாய்மாரின் ஆரோக்கியத்துக்காக வழங்கப்பட்டது .
சமகால பொருளாதார நெருக்கடியில் இருந்து கர்ப்பிணி தாய்மாரை மீட்டு உடல் நலத்தின் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாக இத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment