மர்ஹுஹ் எம்.சி.அஹமட் (முன்னாள் கல்முனைM.P) அவர்களின் 15வது சிராத்த தினம் ஜுலை 03ம் திகதி 2023



ல்முனைத் தொகுதியின் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக 14 வருடங்களும் (1960- 1965, 1968 - 1977) கல்முனைப் பட்டின சபைத் தலைவராக 13 வருடங்களும் சேவையாற்றிய மர்ஹும் எம்.சி.அஹமட் அவர்களின் 15வது சிராத்த தினம் ஜுலை 03ம் திகதி.


இவரது காலத்தில் இப்போது இருப்பது போன்று மாவட்ட பாராளுமன்ற தெரிவு இருக்வில்லை. தொகுதி ரீதியாக தெரிவு நடைபெற்றது - தற்பொழுது போன்று பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது. என்றாலும் இவரது காலத்தில் இவரால் செய்யப்பட்ட சேவைகளும் அபிவிருத்திகளும் வேறு எவராலும் இதுவரை செய்யப்படவில்லை என்றே கூறலாம். குறிப்பாக 1965 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி கண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 1968 நடைபெற்ற இடைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு கல்முனை தொகுதி பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டதன் பின் முழு இலங்கையிலும் இவரது வெற்றி அக்கட்சியின் 1970இல் பெற்ற வெற்றிக்கு அடிகோலியது. அதன்பின்னர் மர்ஹும் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் உள்ள இஸ்லாமிய சோஷலிச முன்னணியின் மகாநாட்டை கல்முனையில் ஒரு சிறிய பாடசாலையில் மிகச் சிறப்பாக நடாத்தி இறுதி நாள் நிகழ்ச்சிகள் அப்போதைய எதிர்கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா கலந்துகொண்ட கூட்டத்தில் இவ்விடத்தில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒன்று ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வேண்டுகோளை கட்டாயம் நிறைவேற்றுவேன் என மேடையில் டாக்டர் பதியுதீன் முன்னிலையில் கௌரவ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உறுதி வழங்கினார்.

1970 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு டாக்டர் பதிவுதீன் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் இம் மகளிர் கல்லூரியை ஸ்தாபிக்க இடவசதி இல்லை என்ற பிரச்சினை ஏற்பட்டபோது இப்பாடசாலையில் சுற்றியிருந்த அவரது உறவினர்களும் நெருங்கிய ஆதரவாளர்களும் காணிகளை தர மறுத்த போது தன்னுடைய அரசியல் பலத்தை உபயோகித்து பலவந்தமாக இக் கல்லூரிக்கு எடுத்துக் கொடுத்தார். அத்தோடு இக்கல்லூரிக்கு அவரது பெயரை வைக்கும்படி எத்தனையோ பேர் வற்புறுத்திய போதும் எதிர்கால பிரச்சினையை மனதில் கொண்டு மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயரிட்டார். இக்கல்லூரியின் உட்கட்டமைப்பு அவரது மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், தளபாடங்கள், உபகரணங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொடுத்ததோடு இக் கல்லூரியை அவரது பதவி காலத்திலே ஒரு தரமான மகளிர் கல்லூரயாக மாற்றினார். இன்று இலங்கையிலேயே அதி கூடிய முஸ்லிம் பெண்களை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம், பொறியியல் விஞ்ஞானம், கலை, போன்ற பாடங்களுக்கு அனுப்புகிறது. கா.பொ.த உயர்தரம் விஞ்ஞானம் படிப்பதற்கு எமது மாணவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு சென்று படிக்க வேண்டி இருந்தது. இதனை மனதில் கொண்டு அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் விஞ்ஞான உயர்தர வகுப்பு ஏற்படுத்தி அதற்குரிய விஞ்ஞான ஆய்வு கூட வசதிகளை செய்து கொடுத்ததோடு விஞ்ஞான படிப்பிக்க திறமையான ஆசிரியர்களையும் வரவழைத்துக் கொடுத்தார். அவரது முயற்ச்சியின் பலனாக முதல்முறை தோற்றிய மாணவர்க மருத்துவ துறைக்கும் எஞ்சினியர் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டார்கள் (டாகடர் நஸீர்,நஜீமுடீன் ,பாறுக் எஞ்சினயர) அதே போன்று தனது தொகுதியில் உள்ள ஏனைய பாடசாலைகளிலும் கா.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவை ஏற்படுத்தி இதற்குரிய வளங்களையும் பெற்று கொடுத்தார்.

கல்முனை சாஹிரா கல்லூரியில் அகில இலங்கை தமிழ் தின விழாவை ஏற்படுத்தி கல்வியமைச்சின் மிக உயரதிகாரிகள் கல்விஅமைச்சர் போன்றவர்களை இக்கல்லூரிக்கு அழைத்து வந்து அதன் மூலமாக பல கட்டடங்களையும் ஏனைய வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் தனது தொகுதியிலுள்ள பல தமிழ் பாடசாலைகளையும் தரம் உயர்த்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தமிழ் மாணவர்களின் கல்வியை முன்னேற்றினார். இவரது தொகுதிக்கு வெளியே இருந்த காரைதீவு தமிழ் மகாவித்தியாலயத்திற்கு ஒரு விஞ்ஞான கூடத்தை முதலில் பெற்றுக்கொடுத்தார்.
கல்முனை மக்கள் செட்டி மார்களின் அதிக வட்டி பிடியில் இருந்த போதும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி போன்றவற்றை பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறுவி எமது பகுதியில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் முதன்முதலாக வங்கியில் வேலை பெற்றுக் கொடுத்தார். வங்கியின் மூலமாக குறைந்த வட்டிக்கு கடன் பெற உதவி செய்தார்.

கல்முனையில் சலுசலா, C.W.E போன்றவற்றை நிறுவி எமது தமிழ் முஸ்லிம் வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்த தோடு மக்களுக்கு மலிவு விலையில் புடவை பல சரக்குகள் என்பன கிடைக்கச் செய்தார். இவரது காலத்தில் இப்பிரதேசம் விவசாயத்தில் முன்னேற்றம் கண்டது. திறமைவாய்ந்த நீர்ப்பாசன பொறியியலாளரை நியமித்து அவரை கொண்டு பல விவசாய அபிவிருத்திகளை வேலைகள் நடைபெற்றன. குறிப்பாக பல அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. நீர்ப்பாசனக் குளங்கள் திருத்தி அமைக்கப்பட்டு இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டன. வெள்ளத்தினால் ஏற்படும் வீதி தடையை நீக்கி வீதிகள் உயர்த்தப்பட்டு பாலங்கள் அமைக்கப்பட்டன. கமநல நிலையங்கள் அமைக்கப்பட்டு கிராமிய வங்கியை நிறுவி அதன் மூலமாக விவசாயிகளுக்கு கடன், பசளை போன்றவற்றை பெற்றுக்கொடுத்தார்.

கிட்டங்கி துறையை மக்கள் மிகச்சிரமத்தின் மத்தியில் தோணிகளில் பகலில் மட்டும் கடந்து செல்வதை நிறுத்தி கிட்டங்கி பாலத்தை நிறுவியதன் மூலம் அப்பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கினார். விவசாயத்தைப் போன்று மீன்பிடித் தொழிலும் இவரது காலத்தில் முக்கியத்துவம் பெற்றது இவர் பல மீனவர் கூட்டுறவு சங்கங்களை நிறுவி அதன் மூலம் மீனவருக்கு இயந்திரப் படகுகள், மீன்பிடி வலைகள், வள்ளங்கள் பெற்று கொடுத்தார் தோணிகள கட்டுவதற்கு காட்டு மரங்கள் பெறுவதற்கு பேர்மிட் பெற்றுக் கொடுத்தார் அத்தோடு மீனவர்களுக்கு கடன் வசதிகள் போன்றவற்றையும் பெற்றுக்கொடுத்தார். நன்னீர் மீனவர்களுக்காக சுற்றுப்புறங்களிலும கல்லோயா நீர்த்தேக்கம் மற்றும் வெளி இடங்களில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தார். இவரது காலப்பகுதியில் தான் கல்முனை பஜார் விஸ்தரிப்பு நோக்கமாகக் கொண்டு பிரதான வீதியில் அரசாங்க நிலங்களை இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்து கல்முனையின் வியாபார ஸ்தலங்களை கட்டியதோடு நகர் அபிவிருத்திக்கும் இடம் ஒதுக்கினார்.
கல்முனைக்குடியில் ஒரு ஆஸ்பத்திரி அமைப்பதற்கு நிதி கேட்ட போது நிதி பற்றாக்குறையால் சுகாதார அமைச்சர் கல்முனை ஆஷ்பத்திரியை தரம் உயர்த்தி தள வைத்தியசாலையாக மாற்றி அதற்குரிய வசதிகளை செய்து கொடுத்தார் இன்று அது கல்முனை வடக்கு வைத்தியசாலை என அழைக்கப்படுகிறது இக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை பட்டினசபை நிதியை உபயோகித்து ஒரு ஆயுள் வேத வைத்தியசாலையை ஏற்படுத்தினார் (இங்கு தான் தற்போதைய அஸ்ராப் வைத்தியசாலை நிறுவப்பட்டது) பின் தனக்கு கிடைத்த நிதியை கொண்டு அதன் அருகில் ஒரு மகளிர் மகப்பேறு வைத்தியசாலை கட்டத்தொடங்கினார்1978 தேர்தலில் தோல்வியுற்றதும் அவரது பெயரில் வைத்தியசாலை கட்டிடம் இருக்க கூடாது என்று தேர்தல் முடிந்த கையோடு அதனை உடைத்து விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் எவ்வித வேறுபாடும் காட்டாமல் அவர்களிடத்தில் மிக நல்லுறவை ஏற்படுத்தினார். கல்விக்கூடங்கள், பொது ஸ்தாபனங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றில் ஒற்றுமையை வளர்த்தார். சமய விழாக்கள், திருமண வைபவங்கள், மரண சடங்குகள் என்பவற்றில் முஸ்லிம்களும் தமிழர்களும் இரண்டறக் கலந்து கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகள் அன்று சமூக நல்லுறவை வலுவடையச் செய்தன.
இவரது காலத்தில் இவரை ஏழை எளியவர்கள் இலகுவாக நெருங்க முடியும். எல்லோரிடமும் கட்சிப் பாகுபாடின்றி சிரித்த முகத்துடன் பழகுவார்.

கல்முனை மக்களின் வைத்திய வசதியை மேம்படுத்துவதற்காக அதனை தரம் உயர்த்தி ஆதார வைத்தியசாலை மாற்றினார். சாய்ந்தமருது வெளி நோயாளர் பகுதிக்கு தரமான வைத்தியர்களை நியமித்து அதன் அருகில் ஒரு மகப்பேறு விடுதியை ஏற்படுத்தி கொடுத்தார்
முதன்முதலில் முஸ்லிம்களுக்கு ஒரு தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் எ்ன்று பாராளுமன்றத்தில் 1976 ஆம் ஆண்டு குரல் கொடுத்தவரும் இவரே. இவர் பழகியது எல்லாம் ஏழை எளிய மக்களுடன் தான். அவர்களின் கஷ்டங்கள் ஒவ்வொன்றையும் எப்படி தீர்க்கலாம் என்று பாடுபட்டார். இவரது காலத்தில் பொலிசார் மிக நேர்மையாகவும் நீதியாகவும் மக்களுடன் நடந்தார்கள். அரசாங்க அலுவலகங்களிலும் ஏனைய பொது இடங்களிலோ ஏதாவது அநியாயங்கள் நடப்பதாக அறிந்தால் அந்த இடத்துக்குச் சென்று அந்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் மீனவரின் நலன் கருதி ஒரு ஐஸ் பெக்டரியை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை கல்முனைக்கு கூட்டி வந்து திறந்து வைத்தார்.

இவரது எண்ணக்கருவில் உருவாக்கியதுதான் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி. கல்முனையிலுள்ள இடப் பிரச்சினையை மனதில் கொண்டு அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் அழைத்துவந்து சம்மாந்துறைய திறந்து வைத்தார்
இவரது பதவி காலத்தில் பிரதமர சிறிமகூட்டி வந்து மீனவர்களுக்கு உதவுவதற்காக ஒரு ஐஸ் பெக்டரியை நிறுவி அதனை திறந்து வைத்தார்

இப்படியாக பல வகையிலும் கல்முனைப் பிரதேசத்திற்கு சேவை செய்தவருக்கு நல்ல பாக்கியத்தை மறு உலகில் கொடுப்பதற்கு எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :