இன்று கிழக்கிலங்கையில் வரலாற்றுத் தொண்மையும் சிறப்பும் மிக்க கோயில்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு ஏறாவூர் 05 குறிச்சி ஸ்ரீ கருமாரியம்மள் ஆலயம் தீமிதித்தல் அத்தோடு சர்க்கரை அமுது ஆயுத பூசை தீப்பாய்தல் போன்ற நிகழ்வோடு நவரெத்தினராசா சுபசங்கர் குடும்பத்தினர்களால் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டதோடு நிறைவேறியது
இந்நிகழ்வில் குருமார்களும், பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்து சிறப்பித்தனர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருமாரியம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பல வருட காலமாக எங்களுடைய ஆலயம் பழைய கட்டிடமாக காணப்படுகின்றது. இதை நிர்வாக சபையினர்கள் உடைத்து புதிய மூலஸ்தனமானஆலயமாக மாற்றி கட்டப்பட்டு இடையில் கட்டிட வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டுள்ள கட்டிட வேலைகள் தொடர வேண்டும்,
என நிர்வாக சபையினர் விரும்புகின்றனர். பிராந்தியத்தில் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் கட்டிட நிர்மாணத்துக்கு ஆர்வமுள்ளவர்கள் தாங்களது பங்களிப்பை செய்ய முடியும். கட்டிட நிர்மாணப்பணிக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள; உதவ விரும்புவோர் பின்வரும் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
ஆலய நிர்வாக சபை தொடர்புகளுக்கு
Thalivar. 0756419440
Seyalalar.0754373168
Porulalar.0774536525
WhatsApp. 0774536525
0 comments :
Post a Comment