சீ பிரீஸ் உணவகத்தின் உரிமையாளர் எம்.வை.எம். ஜௌபர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
2010ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 20 ரூபாய்க்கு புரியாணி என்ற கோஷத்துடன் நிகழ்வுகள் களைகட்டியிருந்தது. சீ பிரீஸின் நாலா பக்கங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த நிகழ்வில், தயிர் சட்டி புகழ் கே.எல்.நஜாத்தின் வார்த்தை ஜாலங்கள் சபையோரை கலகலப்பாய் வைத்திருந்தது. பிராந்தியத்தின் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களான ஏ.ஆர்.எம். நௌபீல், ஜனூஸ் சம்சுதீன், எஸ்.ரீ. ரோஷன் அஸ்ரப், எம்.பி.எம். றிம்சான், றம்சானா சமில் போன்றோர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர்.
பாடல், பொதுமக்களின் கருத்துக்கள் என கலகலப்பாக சென்ற நிகழ்வின் இடையிடையே பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் வாக்களிக்கப்பட்டவாறு 20 ரூபாய்க்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment