ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த "21 ஆம் நூற்றாண்டில் ஊடகம்" எனும் தொனிப்பொருளில் 74 ஆவது சிரேஸ்ட மாணவர்கள் ,ஊடக ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் (29) சனிக்கிழமை மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பதுரியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ. ரஹ்மான் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இரு அங்கங்களாக நடைபெற்ற இக்கருத்தரங்கில், இலக்ரோனிக் மீடியா, சமூக ஊடக வலைத்தளங்கள், வீடியோ. புகைப்படக்கருவியின் நுட்பக் கலைகள் எனும் தலைப்பில் கலாநிதி எம்.சி.ரஸ்மின், தாஹா முஸம்மில், ஜாவித் முனவ்வர், அஷ்ரப் ஏ சமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்ண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்
கருத்தரங்கின் இறுதி நிகழ்வில் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் மற்றும் திருமதி தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோர் பிரதம அதிதியாகவும், பேராதனைப் பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு கற்கைத் துறையின் முன்னாள் தலைவர் எம்.ஐ.எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்
இந் நிகழ்வில் உயர்ஸ்தானிகருக்கும் பேராசிரியர் எம்.ஜ.எம். அமீன் அவர்கள் இக் கல்லுாாியின் முன்னாள் அதிபராகவும் அத்துடன் கடந்த 45 வருட காலமாக கல்வித்துறையில் பேராதானை பல்கழைக்கழகம், எழுத்துறைகளில் தமது வாழ்வை கல்விக்காக அர்ப்பணித்து இன்றும் சேவையாற்றிக் கொண்டு வாழ்பவரை - கல்லுாரியின் பழைய மாணவிகள் அதிபர். மற்றும் முஸ்லிம மீடியா போர உறுப்பினர்களும் அவரை பாராட்டிக் கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் மீடியா போரத்தின் உபதலைவர்களுள் ஒருவரான எம்.ஏ.எம் நிலாம், ஆலோசகர் தாஹா முசம்மில், ஊடக ஒருங்கினைப்பாளர் ஜாவித் முனவ்வர், போரத்தின் இணை தேசிய அமைப்பாளர் சாதிக் சிஹான், போரத்தின் பொருளாளர் எம்.எம். ஜெஸ்மின், போரத்தின் ஊடக இணைப்பாளர் அஷ்ரப் ஏ சமத். ஊடகப் போதனை நடத்தும் ஆசிரியர்கள், கேகாலை மாவட்ட முஸ்லிம் மீடியா போர இணைப்பாளர் அமீர் ஹூசைன் மற்றும் அங்கத்தவர்கள், ஊடகவியலாளர் பாரா தாஹீர், சித்தீக் ஹனிபா. வசந்தம் செய்திப்பிரிவின் உதவி முகாமையாளர்
பதுரியா மத்திய கல்லுாரியின் பழைய மாணவிகளின் செயலாளர் கண்டி பொது வைத்தியசாலையினர் வைத்திய அதிகாரியுமான டொக்டர் எம்.ஜே.எப் ஜமினா உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்
இந நிகழ்வில் கல்லுாாியின் நுாலகத்திற்கு ஒரு தொகுதி நுால்களை பேராசிரியர் அமீன் மற்றும் அஷ்ரப் சமதின் தந்தை சமட் சார்பாகவும் கல்லுாாி அதிபரிடம் நுால்கள் கையளிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment