அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ரவூப் ஹக்கீம் இருபத்தொன்பது வருடமாக எம்பியாக கிழக்கு முஸ்லிம்களின் பெருவாரியான ஓட்டுப்போட்டு அதன் பலனாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவராக பல அமைச்சுக்களிலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தவர். கிழக்கு முஸ்லிம்களின் அதிக ஓட்டுக்களால்த்தான் இன்னமும் அதிகாரத்தை அனுபவிப்பவர்.
அலி சாஹிர் மைலானாவும் ஹக்கீம் காலத்தில் இருந்தே அதிகாரத்திலும் எம்பியாகவும் இருந்தவர்.
ஹிஸ்புல்லாவும் 1989ம் ஆண்டு முதல் எம்பியாக இருந்தவர். பிரதி அமைச்சராக, அமைச்சராக கிழக்கு மாகாண சபை அமைச்சராக ஆளுனராக இருந்தவர்.
மூவருமே இளம் வயது முதல் அதிகாரத்தில் இருந்து சுகம் அனுபவித்து விட்டு இப்போதும் மூவரையும் விட வயதில் இளையவரான ஆளுனர் செந்தில் தொண்டமானிடம் சென்று கிழக்கு மாகாண அபிவிருத்தி, ஏறாவூர் நகரசபை காணி விசயமாக பேசுவதற்கு அவர் வீடு தேடி போயுள்ளனர்.
அப்படியாயின் இந்த 30 வருடங்களாக அதிகாரம் இருந்தும் கிழக்கை இவர்கள் அபிவிருத்தி செய்ய முனையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது கொஞ்சமும் வெட்கமின்றி ஆளுனர் காலில் வீழ்ந்துள்ளனர்.
செந்திலை ஆளுனராக நியமித்த அதே ஜனாதிபதி ரணிலின் காலிலாவது விழுந்திருந்தால் சில பிச்சைகளை போட்டிருப்பார்.
டயஸ்போராவின் காசுக்காக ஜனாதிபதி ரணிலை எதிர்த்துக்கொண்டு ஒரு எம்பியாக கூட இருக்காத செந்திலின் காலில் இவர்கள் விழுந்துள்ளமை தமக்கு அதிகாரம் தந்து ஆளாக்கிய கிழக்கு முஸ்லிம் சமூகத்துக்கு இவர்கள் செய்த துரோகத்துக்கு இறைவனின் தண்டனையாகவே நாம் பார்க்கிறோம்.
0 comments :
Post a Comment