ஈஸ்டன் பிரிமியர் லீக் சம்பியன் கிண்ண கிறிக்கட் சுற்றுப் போட்டியின் கால் இறுதிப் போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 2 வீக்கட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் நிஸ்கி அஹமட் 31 ஓட்டங்களையும், மிப்ராஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழக வீரர் நிஸ்கி அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
காலிறுப் போட்டியின் போது 3 சிறப்பான பிடியெடுப்புகளை நிகழ்த்திய இளம் வீரர் அரபாத் அஹமட் ஆட்ட நாயகன் நிஸ்கி அஹமட் அவர்களினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
0 comments :
Post a Comment