திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேரமடு பகுதியில் நெற் செய்கை பண்ணப்பட்ட 800 ஏக்கர் வேளாண்மை அறுவடை நடவடிக்கைகள் (30) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பேரமடு குளத்தின் நீரினை பயன்படுத்தி இம்முறை முதல் தடவையாக அதிகளவிலான ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட நெற் செய்கைகளின் அறுவடை செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த வருடம் குளத்தினை அபிவிருத்தி செய்தபின்னர் முதல் முறையாக 800 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை அறுவடைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கை அறுவடை நடவடிக்கையினை கிழக்கு மாகாண நீர்பாசன பொறியியலாளர் அப்துல் ஜப்பார் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கந்தளாய் நீர்ப்பாசன பொறியலாளர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment