கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 96 பழைய மாணவர்கள் ஒன்றினைந்து மேசைகள் மற்றும் கதிரைகள் என்பன அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை பாடசாலையோடு மீண்டும் ஒன்றினைக்கும் முகமாக மறைந்த பாடசாலையின் ஆசிரியர்களான மர்ஹூம் ஏ.ஹபீப் முஹம்மட், எம்.எஸ்.எம்.ஷர்மில் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இடம் பெற்ற மாபெரும் கிரிகெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பாடசாலையில் கல்வி கற்ற 96 பழைய மாணவர்கள் ஒன்றினைந்து பாடசாலையின் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தேவையாக காணப்பட்ட ஒரு தொகுதி மேசைகள் மற்றும் கதிரைகள் என்பன் பாடசாலை அதிபர் அதிபர் அப்துல் ரசாக் அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர்.இதன் போது பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னா உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் அருகில் நிற்பததை காணலாம்.
0 comments :
Post a Comment