அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையினைப் பொறுப்பேற்றார்.



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று (10) திங்கட்கிழமை சர்வமத போதகர்களின் ஆசீர்வாத உரையுடன் கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இவர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை அரசாங்க அதிபராக இருந்து ஓய்வுபெற்றுச்சென்ற ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்களின் இடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக கடமையேற்ற சிந்தக்க அபேவிக்ரமவின் இப் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அடங்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :