இந்த போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று இதுவரை 210 சான்றிதழ்களை பெற்றுள்ளார் கலீல் பாகவீ. இதுவே இந்த போட்டிகளில் ஒருவர் பெற்றுள்ள அதிகப்பட்ச சான்றிதழ்கள் ஆகும். இதனை அங்கீகரிக்கும் விதமாக *இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும்* இந்த சாதனைக்காக கலீல் பாகவீயின் பெயர் இடம் பெற்றுள்ளது (https://indiabookofrecords.in/maximum-certificates-achieved-in-mygov-quiz-contests-by-an-individual/).
குவைத் வாழ் தமிழரான கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த கலீல் பாகவீ பல்துறை வல்லுநர், பல்வேறு விருதுகளை பெற்றவர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், மக்கள் நல பணியாளர், விமர்சகர், பத்திரிகையாளர், சமூக சேவகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், ஊடகவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர், குவைத்திலும், தமிழகத்திலும் சமூக, சமய, கல்வி, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர். உலகளவில் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இந்த சாதனை குறித்து பேசிய கலீல் பாகவீ “இயற்கையிலேயே தேடல் ஆர்வமுள்ளவன் நான். சிறு வயதிலிருந்தே எல்லா விதமான போட்டிகளில் பங்கேற்பதை தொடர்ந்து செய்து வருகின்றேன். பரிசுகளை எதிர்பார்த்து எதிலும் நான் பங்கேற்பதில்லை. பார்வையாளராக இருப்பதை விட பங்கேற்பாளராக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். வெற்றி தோல்வி என்பது நிலையானது அல்ல. போட்டிகளில் பங்கேற்றவன் என்ற பெயரே நமக்கு திருப்தியை தர போதுமானது. அந்த வகையில்தான் இந்திய ஒன்றிய அரசு நடத்துகின்ற இந்தப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றேன். நிறைய தகவல்களை இதனால் தெரிந்து கொள்ள முடிகின்றது. சில வரலாற்று இருட்டடிப்பு தகவல்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. மக்கள் அனைவரும் இது போன்ற போட்டிகளில் வயது வித்தியாசமின்றி பங்கேற்க வேண்டும். நமது தமிழ்நாடு அரசும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி தமிழின வரவாற்றையும், தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் செயற்திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்" கூறினார்.
கலீல் பாகவீக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment