அறுகம்பை கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டவர் ஒருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியும் கைப்பையிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொத்துவில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக ஒலுவில், பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடைய இருவர் கடந்த புதன்கிழமை ( 11) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கிணங்க எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment