ஊடகவியலாளரின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி தியாகி அறக்கொடை நிதியத்தினால் கையளிப்பு



பாறுக் ஷிஹான்-
ன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் இடம் பெற்ற தனியார் பேருந்து விபத்தில் மரணம் அடைந்த அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் இஜாஸ் என்பவரின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பணிப்பாளர் ஊகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் ஒட்டமாவடி பிரதேச சபை பிரதான மண்டபத்தில் புதன்கிழமை(19) மாலை நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 வறிய மாணவர்களுக்கு ' கற்றலுக்கு வறுமை தடை அல்ல ' என்ற அடிப்படையில் ஊக்குவிப்பு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டதுடன் அண்மையில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் இடம் பெற்ற தனியார் பேருந்து விபத்தில் மரணம் அடைந்த மற்றும் பாதிப்படைந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரனின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜயசேகர மற்றும் 23 வது படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி பிரிகெடியர் நிலந்த பிரேம ரத்தின,வாகரை 233 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் கமல் டி சில்வா, 232 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் அசித்த புஷ்பகுமார,ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நெளபர்,ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்-அமீன்,கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி வீ.ரீ.அஜ்மிர்,ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸத்தீன்,வாழைச்சேனை,கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளான லசந்த பண்டார, சந்திரகுமார மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜி உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :