சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் வன்முறைகளை சகித்துக்கொண்டு தேனிலவு கொண்டாடுகின்றன நிலை மாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார் இம்ரான்



எம்.ஜே.எம். சஜீத்-
ர்வதேச நாடுகள் இஸ்ரேலின் வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படும் அழிவை உடனடியான நிறுத்தவும் சுதந்திர பலஸ்தீன அரசாங்கத்தை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எடுத்த தீர்மானங்களையும் அது தொடர்பான உலகளாவிய கருத்துகளையும் நடைமுறைபடுத்துவதற்கான செயல்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலினால் இழைக்கப்படும் அநியாயங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜெனின் அகதி முகாம் மீதான கொடூர தாக்குதலே போதுமானது.

பலஸ்­தீனின் ஜெனின் முகாம் மீது இஸ்­ரே­லிய படை­யினர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முன்­னெ­டுத்த பலத்த தாக்­கு­தல்­களில் 12 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் அங்கு வர­லாற்றில் இடம்­பெற்ற மிக மோச­மான ஆக்­கி­ர­மிப்­பு­களில் ஒன்­றாக வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.
பலஸ்­தீ­னி­லுள்ள மிகப் பாரிய அகதி முகாம்­களுள் ஒன்­றான ஜெனின் மீது நடாத்­தப்­பட்ட இந்தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் சுமார் 100 பேர் காய­ம­டைந்­த்துடன் 4000 இற்கும் அதி­க­மானோர் தமது வீடு­களை விட்டும் வெளி­யே­றி­யி­ருக்கின்றனர்.
1000 இஸ்­ரே­லிய படை­யினர் இத் தாக்­கு­தலில் பங்­கெ­டுத்­த­தா­கவும் இதன்­போது தாக்­குதல் ஹெலி­கொப்­டர்கள், ட்ரோன்கள், தாக்­குதல் விமா­னங்கள் மற்றும் கன­ரக ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். சுமார் 20 தட­வைகள் ட்ரோன் மூலம் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
இத் தாக்­குதல் மேற்குக் கரையில் கடந்த 20 வரு­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்று என மிடில் ஈஸ்ட் மொனிடர் எனும் ஊடகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத் தாக்­கு­தல்­களை பலஸ்­தீன அதி­கார சபை உட்­பட சர்­வ­தேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்­பு­களும் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன.
அதிமாத்திரமன்றி, இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே தினமும் ஒரு பலஸ்தீனராவது இஸ்ரேலிய படைகளாலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளாலும் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுமே வருகின்றனர்.
இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லினால் நடாத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் 26 சிறு­வர்கள் உள்­ளிட்ட 170 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அலு­வ­ல­கத்தின் அறிக்­கை­க­ளுக்­க­மைய இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லிய குடி­யே­றிகள், மாதாந்தம் தலா 95 தாக்­கு­தல்­களை பலஸ்­தீ­னர்கள் மீது நடாத்­தி­யுள்­ள­னர்.
இதற்­க­மைய மொத்­த­மாக 570 தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் சுமார் 160 தாக்­கு­தல்­களில் பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

இது இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மாத்­தி­ர­மன்றி சட்­ட­வி­ரோத யூத குடி­யேற்­ற­வா­சி­களும் அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் மீது எந்­த­ளவு தூரம் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­கின்­றனர் என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவற்றில் ஒன்றேனும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கவலையான செய்தியாகும்.

சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.

எவ்வாறு தீவிரவாத இயக்கங்களை தடை செய்து அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகின்றனவோ அதேபோன்று மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதத்தில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும்.
பலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வரவும் அம்மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழல் பிறக்கவும் குரல் கொடுக்க வேண்டியதும் சக தேசங்களில் வாழும் மக்கள் ஒவ்வொருவரதும் கடப்பாடாகும் என இதன்போது இம்ரான் எம்.பி. தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :