மூன்றரை மாத குழந்தையின் தந்தையான இஜாஸ் தன் மனைவியோடு மறுநாளே கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்



ஒலுவில் நிருபர் கே.எல்.அமீர்-
பொலநறுவை மன்னம்பிட்டி பாலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த றபியுடீன் இஜாஸ் (29) மறுநாள் தன் மனைவியோடு கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்

இளம் ஊடகவியலாளரான இஜாஸ் ஒலுவில் - 04 ஆம் பிரிவில் வசித்து வந்தவர். இவருக்கு மூன்றரை மாதம் நிரம்பிய 3 1/2 முகம்மத் சயான் இல்மு என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

இம்போர்ட் மிரர் இணைய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார்.

இவரது மனைவி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் மாணவியாக இருக்கின்றார். தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைபுரிந்து வந்த நிலையில் அங்கு மனைவியையும் குழந்தையும் கொழும்புக்கு அழைத்துக்கொண்டு செல்வதற்காக பஸ்ஸில் வந்துள்ளார்.

தான் பஸ்ஸில் ஊர் நோக்கி வருவதாகவும் கொழும்பில் பார்த்த வீட்டில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பெட்டியில் வைத்து அடிக்கி தயார் பண்ணுமாறும், வந்தவுடன் மீண்டும் கொழும்புக்கு ( திங்கட்கிழமை 10/07/2023) செல்ல வேண்டும் எனவும் மனைவியுடன் கூறியுள்ளார்.

இதற்கு அமைவாக மனைவி கொழும்பு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த போதே மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவரின் அகால மரணச் செய்துகட்டு ஒலுவில் பிரதேசம் எங்கும் மக்கள் கவலையுடன் துக்கம் அடைந்தவர்களாக ஒலுவில் ஊரே சோகமாயமாக காணப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :