சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் கணித பாட முகாம் பயிற்சி நிகழ்வு






அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரித்து பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் நோக்கில் பாடசாலை அதிபர் றிப்கா அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஸா உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.சன்ஜீவன் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம். அப்துல் மலிக் மற்றும் ஈ.பி.எஸ்.ஐ. ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஸிக் ஆகியோர் அதிதிகளாவும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

கணித பாட ஆய்வு கூட திறப்பு விழாவும் கண்காட்சி ,
மைதான செயற்பாடுகளாக கணித போட்டி , கோணங்களை கண்டறியும் நிகழ்வு , கலை நிகழ்வுகளாக கணித நாடகங்கள் , கணித கவிதைகள் கணித கதைகள், கணித விளையாட்டுகள் என கணிதத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :