உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ஒருநாள் பயிற்சி பட்டறை



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் ஐ. எம். றியாஸ் அவர்களின் ஆலோசனையிலும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையுடன் (26) புதன்கிழமை காலை முதல் மாலை வரை உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ஒருநாள் பயிற்சி பட்டறை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMA யின் தலைவருமான எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையிலும், அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.பி. சரத் சந்தரப்பால பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் பி. தியாகராஜா, நிலையத்தின் பொறுப்பதிகாரி எ. ஹமீர், கிழக்கு மாகாண காரியாலயத்தின் உஸ்தியோகத்தர்கள், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. அலி, நிலையத்தின் போதனாசிரியர்கள் என பலர் கலந்து கொண்டதோடு. சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் 50 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.

இப் பயிற்சி பட்டறையின் வளவாளராக முன்னாள் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொருப்பதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களினாலும் , சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ். எச். எம். இர்பான் மௌலானா அவர்களினாலும் விரிவுரைகளும், பயிற்சியுகளும் நடாத்தப்பட்டது.

அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் எம். பி. சரத் சந்திரப்பால, முன்னா தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொருப்பதிகாரி மேஜர் கே.எம். தமீம், இளைஞர் சேவை அதிகாரி மோகன்ராஜ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம். ஜெஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :