அரசாங்கத்தில் எது நடக்கும் என்று எதிர்பார்க்கின்ற காலகட்டமாக காணப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (25.07.2023) மாலை பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற போது அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்hர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
எனது அறிவுக்கு எட்டிய வரையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று முதலில் வரப்போகின்றது என்றே நினைக்கிறேன் இதுவே ஜனாதிபதியில் யூகமாக தெரிகின்றது.
ஆனால் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் வரப்போகின்ற தேர்தலை கட்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த இடத்தில் சொல்லிக் கொள்கின்றேன். இக்காலகட்டத்தில் சிறுபான்மை கட்சியின் தலைமைகள் இந்த ஜனாதிபதியோடு தங்களது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட விடயங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை சில்லறைக் கடையாக்க முயற்சிக்கின்ற நிகழ்வை வேதனையாக பார்க்கின்றேன்.
ஏனெனில் நீண்டகாலமாக அபிவிருக்குழு தலைவராக இருந்து வழி நடத்தி சென்றவன் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் நடந்து கொள்ளும் விடயமானது கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரை கேள்வி கேட்கின்ற பாராளுமன்றஉறுப்பினருக்கு மாவட்ட அரசாங்க அதிபருக்குள்ள சட்ட வரையறை அவருக்குள்ள அதிகாரம் என்ன என்பது பற்றி தெரியாமல் அல்லது பிரதேச செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்னவென்று தெரியாமல் காணிப்பிரச்சனை மற்றும் இன்னொரென்ன பிரச்சனைகளை எடுத்து வந்து ஒப்பாரி வைக்கின்ற அரசியல் செய்கின்ற நிலவரத்தை கைவிட்டு மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்வது என்பது மாவட்டத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
ஏனெனில் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பலதரப்பட்டவர்கள் வருவார்கள் வேறு இனத்தினை சேர்ந்த அதிகாரிகள் வருவார்கள். அதனோடு தேசியத்திலே அவர்களது நடவடிக்கைகள் காட்டப்படுகின்ற நிலவரம் சண்டைரூபவ் சச்சரவு பிடித்துக் கொண்டு ஆக்களுக்கால் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கின்ற மனக்குறையை செய்யப்போகின்ற ஒரு மாவட்ட ஒருங்கினைப்புக்குழுவாக பார்ப்பது என்பது மாவட்டத்திலே அரசியலில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்ற ரீதியிலே கவலையாக இருக்கின்றது.
இதனை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் எனது நண்பருமான அமைச்சர் நசீர் அஹமட்டில் கவனத்துக்கு இவ்விடத்தில் கொண்டு வந்துள்ளேன். ஏனெனில் நீண்டகாலமாக எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த நிகழ்வாகும். எதிர்காலத்தில் மாவட்டத்திலுள்ள அரசியல் தலைவர்கள் கௌரவமாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழவை பயன்படுத்திக் கொள்ள வேண்;டும் என்று ஆலோசனை கூறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதேச செயலாளர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment